Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
முருங்கைக்காய் பாயா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - ஆட்டுக்கால் பாயாவை விட சூப்பரா இருக்கும்
Murungakkai Paya Recipe in Tamil: இட்லி, தோசை போன்றவற்றுக்கு பொதுவாக சட்னி அல்லது சாம்பார்தான் சரியாக சைடிஷாக இருக்கும். அதேபோல ஆப்பம், இடியப்பம் போன்றவற்றுக்கு தேங்காய்ப்பால் அல்லது பாயாதான். பொதுவாக பாயா ஆட்டுக்காலில்தான் செய்வார்கள். ஆனால் ஆட்டுக்காலை வைத்து மட்டும் தான் பாயா செய்ய முடியுமா? நிச்சயமாக இல்லை, சில காய்கறிகளை வைத்தும் சுவையான பாயாவை செய்யலாம். அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது முருங்கைக்காய் பாயா.

இந்த முருங்கைக்காய் பாயா ஆப்பம், இடியாப்பம் மட்டுமின்றி இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கும் அட்டகாசமாக இருக்கும். இந்த சூப்பரான முருங்கைக்காய் பாயா செய்வதற்கு எளிதானது மற்றும் சுவையானது. குழந்தைகளுக்கு இது போல செய்து கொடுத்தால் அவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சுவையான முருங்கைக்காய் பாயா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் பாயா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா விழுது அரைக்க:
- ½ கப் நறுக்கிய தேங்காய்
- 1 பச்சை மிளகாய்
- ¼ ஸ்பூன் மிளகு
-¼ ஸ்பூன் சீரகம்
- ½ ஸ்பூன் சோம்பு
- 2 கிராம்பு
- 1 ஏலக்காய்
- ½ துண்டு பட்டை
- சிறிது கல்பாசி
- 2 ஸ்பூன் கசகசா
- 10 முழு முந்திரி பருப்பு
பிற பொருட்கள்:
- 10 முருங்கைக்காய் துண்டுகள்
- 1 உருளைக்கிழங்கு
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஏலக்காய்
- 2 கிராம்பு
- ½ துண்டு பட்டை
- 1 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- ⅓ கப் புதினா மற்றும் கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது)
- 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் ½ கப் நறுக்கிய தேங்காய், 1 பச்சை மிளகாய், ¼ டீஸ்பூன் மிளகு, ¼ டீஸ்பூன் சீரகம், ½ டீஸ்பூன் சோம்பு, கல்பாசி, 2 கிராம்பு, 1 ஏலக்காய், ½ துண்டு பட்டை மற்றும் 10 முழு முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 ஸ்பூன் கடலை எண்ணெயைச் சூடாக்கவும். அதில் 1 பிரிஞ்சி இலை, 2 கிராம்பு, 1 ஏலக்காய், ½ துண்டு பட்டை மற்றும் கீறிய 1 பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் 1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய 2 தக்காளியைச் சேர்த்து, 2-3 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும்.
- இலைகள் சுருங்கியதும் நறுக்கிய முருங்கைக்காய் மற்றும் நறுக்கிய ஒரு உருளைக்கிழங்கைச் சேர்த்து, சில நிமிடங்கள் வதக்கவும்.
- முருங்கைக்காய் பாதி வெந்ததும் அரைத்த மசாலா, தேவையான அளவு தண்ணீர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மிதமான தீயில் கொதிக்கத் தொடங்கும் வரை சமைக்கவும். பிறகு மூடி வைத்து, காய்கறிகள் வெந்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை 10-15 நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.
- அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது நன்றாகக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் பாயா ரெடி. இதை சூடான இட்லி, தோசை அல்லது இடியாப்பத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications