Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது?
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலும், இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. சொல்லப்போனால் கோடைக்காலத்தை விட தற்போது தான் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி வெயில் கொளுத்துவதால், அதிலிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் சருமத்தை கடுமையாக தாக்கி, அதன் விளைவாக சருமத்தில் மெலனின் உற்பத்தி அதிகரித்து, சரும நிறத்தை கருமையாக்கிவிடும்.

இப்படி வெயிலால் உங்கள் முகம் கருமையாகிவிட்டதா? இந்த சரும கருமையைப் போக்க எத்தனையோ க்ரீம்களை வாங்கி பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவை அனைத்துமே சரும கருமையை போக்கிவிடாது. ஆனால் அதுவே நம் வீட்டு சமையலறையில் உள்ள குறிப்பிட்ட சில பொருட்கள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதில் சிறந்தது. அந்த பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடும் போது, சரும கருமை மாயமாய் மறைந்துவிடும்.
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கலாம். இப்போது வெயிலால் கருப்பான சருமத்தை வெள்ளையாக்க தக்காளியை எப்படி பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
1. தக்காளி
* இதற்கு தக்காளியின் ஒரு துண்டை எடுத்து, அதை நேரடியாக முகத்தில் வைத்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* பின் 10-15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை செய்து வர, முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.
2. தக்காளி மற்றும் எலுமிச்சை மாஸ்க்
* இதற்கு ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை நன்கு கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. தக்காளி மற்றும் தயிர் பேக்
* இதற்கு ஒரு பௌலில் தக்காளியை அரைத்து எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வெயிலால் முகத்தில் ஏற்படும் எரிச்சலைப் போக்கி, சருமத்தை குளிர்விக்கும்.
4. தக்காளி மற்றும் தேன் பேக்
* இதற்கு ஒரு பௌலில் தக்காளி ஜூஸை எடுத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் வறண்ட சருமத்தினருக்கு ஏற்றது. இதை அடிக்கடி பயன்படுத்தி வரும் போது சரும கருமை மறைவதை நன்கு காணலாம்.
5. தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் பேக்
* இதற்கு தக்காளியை அரைத்து எடுத்து, அத்துடன் வெள்ளரிக்காய் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சரும கருமையைப் போக்குவது மட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
