Latest Updates
-
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
உங்க முகம் கருப்பா, டல்லா இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: உங்கள் முகம் எப்போதும் மிகவும் பொலிவிழந்து டல்லாக உள்ளதா? அப்படியானால் சருமத்தில் இறந்த செல்கள் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்நிலையில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க சருமத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். இப்படி ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, அதிகப்படியான எண்ணெய் பசையும் நீக்கப்பட்டு, சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

கடைகளில் ஏராளமான ஃபேஸ் ஸ்க்ரப்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் நம் வீட்டு சமையலறையில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு ஃபேஸ் ஸ்க்ரப்களை தயாரித்து பயன்படுத்தும் போது, எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது மற்றும் சருமமும் பொலிவோடு காணப்படும். கீழே சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் நேச்சுரல் ஃபேஸ் ஸ்க்ரப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் பாதி வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியை சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. காபி மற்றும் தேன் ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் 1/2 டேபிள் ஸ்பூன் காபித் தூளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 டேபிள் ஸ்பூன் பால் அல்லது தயிரை சேர்த்து, பின் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. சந்தனம் மற்றும் மஞ்சள் ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடரை எடுத்து, அத்துடன் 2-3 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை தேய்த்து கழுவ வேண்டும்.
4. தேங்காய் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் சர்க்கரையை எடுத்து, தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
* இதற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக 5 நிமிடம் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
