Latest Updates
-
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்..
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
Insulin Resistance In Tamil: நமது உடலில் இன்சுலின் மிகவும் இன்றியமையாத ஹார்மோன் ஆகும். இது நமது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இன்சுலின் ஹார்மோன் தான் உடல் ஆற்றலுக்காக பயன்படுதிக் கொள்ளும் வகையில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை செல்களுக்குள் கொண்டு செல்ல உதவி புரிந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் தசைகள் , கொழுப்பு மற்றும் கல்லீரலில் உள்ள செல்கள், இன்சுலினுக்கு உரிய முறையில் பதிலளிக்காத போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது.

இந்த இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை கண்டறிந்து, சிகிச்சை மேற்கொள்ளாமல் இருந்தால், பின் அது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும். இந்த இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை குறித்தும், அதன் அறிகுறிகள் என்ன, அதைத் தடுப்பது எப்படி என்பது பற்றியும் டாக்டர்.P. சிவகுமார் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறிகள்
1. வயிற்றுப் பகுதியில் எடை அதிகரித்துக் கொண்டே போவது
2. கழுத்து, அக்குள், இடுப்பு பகுதியில் கருமையான தோல் திட்டுகள்
3. திடீரென்று தோலில் மருக்கள் அதிகரிப்பது
4. போதுமான தூக்கத்திற்கு பின்பும் உடல் சோர்வாக இருப்பது
5. வீங்கிய அல்லது உப்பிய முகம்
6. சாப்பிட்டதும் பசி எடுப்பது
7. சர்க்கரை மற்றும் மாவுச்சத்து உணவுகளின் மீது நாட்டம் அதிகரிப்பது
8. சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உடலில் ஆற்றல் குறைவது
9. கவனம் மற்றும் நினைவாற்றல் குறைவது
10. இரத்த பரிசோதனை ரிப்போர்ட்டில் ட்ரைகிளிசரைடுகள், ஃபாஸ்டிங் சுக் போன்றவை அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருப்பது
மேலே கொடுக்கப்பட்டுள்ள 10 அறிகுறிகளுமே இன்சுலின் எதிர்ப்புத்தன்மையின் அறிகுறிகளாகும். ஆனால் இவற்றில் 2-3 அறிகுறிகள் இருந்தாலே இன்சுலின் எதிர்ப்புத்தன்மை இருக்கலாம் என்று டாக்டர் கூறினார்.
இன்சுலின் எதிர்ப்புத்தன்மை என்றால் என்ன?
"இரத்தத்தில் உள்ள சர்க்கரையை எனர்ஜியாக மாற்றுவதற்கு நமது உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்லுக்குள்ளேயும் சர்க்கரையை கொண்டு செல்லும் ஹார்மோன் தான் இன்சுலின். எப்போது இந்த செல்கள் இன்சுலினுக்கு பதிலளிக்காமல் போகிறதோ, அப்போது இன்சுலின் எதிர்ப்பு உள்ளது என்று அர்த்தம். இதை அப்படியே விட்டுவிட்டால், அது சர்க்கரை நோய், இதய நோய், கொழுப்பு கல்லீரல் போன்ற பல பிரச்சனைகள் வரும். எனவே இந்த அறிகுறிகள் தெரிந்தால், சில வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்களை உடனே செய்ய வேண்டும்." என்று டாக்டர் கூறினார்.
உணவு முறை மாற்றம்
* ஒவ்வொரு வேளை உணவிலும் மாவுச்சத்தை குறைத்துவிட்டு, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துள்ள உணவை அதிகமாக எடுக்க வேண்டும்.
* உணவில் அளவுக் கட்டுப்பாடு என்பது அவசியம்.
* எந்த வேளை உணவையும் தவிர்க்கக்கூடாது.
* சர்க்கரை நிறைந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
* கண்டிப்பாக வெளி உணவை தவிர்க்க வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
* உடலில் உள்ள சர்க்கரை குறைய வேண்டுமானால், வாரத்திற்கு 3-4 முறை வலிமைக்கான பயிற்சியை செய்ய வேண்டும்.
* தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு வேளை உணவு உட்கொண்ட பின்னரும் 10 நிமிட வாக்கிங்கை மேற்கொள்ளுங்கள்.
* இரவு நேரத்தில் தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
* மன அழுத்தம் கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
