Latest Updates
-
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம்
சர்க்கரை நோய் இருந்தா.. இந்த 7 அறிகுறிகள் ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரியுமாம்.. உஷாராகிகோங்க..
Diabetes Warning Signs In Tamil: சர்க்கரை நோய் என்பது ஒரு நாள்பட்ட கோளாறு. எப்போது கணையத்தால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியவில்லையோ அல்லது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியவில்லையோ, அப்போது ஏற்படுவது தான் சர்க்கரை நோய். இன்சுலின் என்பது இரத்த சர்க்கரையை சீராக்கும் ஒரு ஹார்மோன் ஆகும்.
சர்க்கரை நோயின் 3 வகைகள் உள்ளன. அவை டைப்-1 சர்க்கரை நோய், டைப்-2 சர்க்கரை மற்றும் கர்ப்ப கால சர்க்கரை நோய் ஆகும். இதில் டைப்-1 என்பது உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழிக்கும் நிலையாகும்.

டைப்-2 என்பது கணையத்தால் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாத அல்லது உடலால் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத நிலையாகும். இந்நிலையில் இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும். கர்ப்ப கால சர்க்கரை நோய் என்பது கர்ப்ப காலத்தில் உருவாகி, குழந்தை பிறந்த பின் மறைந்துவிடும்.
தற்போது உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் டைப்-2 சர்க்கரை நோயால் தான் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹைப்பர்கிளைசீமியா என்பது இரத்த சர்க்கரை அதிகமாக இருப்பதன் விளைவாக ஏற்படுவது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தாவிட்டால், அதன் காரணமாக உடலின் பல அமைப்புகள் குறிப்பாக நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் கடுமையாக சேதமடையும்.
2024 ஆம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் மட்டும் சுமார் 89 மில்லியன் பெரியவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டைப்-2 சர்க்கரை நோய் ஒரே நாளில் ஏற்படுவதில்லை, மாறாக படிப்படியாகவே உயரும்.
அப்படி ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தால், அது உடலில் அறிகுறிகளை வெளிப்படுத்தும். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டு வந்தால், நிலைமை மோசமடைவதைத் தடுக்கலாம். இப்போது சர்க்கரை நோய் இருந்தால், ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே தெரியக்கூடிய முக்கியமாக சில எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்போம்.
1. எடை மாற்றங்கள்
விவரிக்க முடியாத எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது சர்க்கரை நோயின் அறிகுறியாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால், அது உடலில் கொழுப்பு தேக்கத்தை அதிகரிக்கும். சில சமயங்களில் சிலருக்கு உடலானது ஆற்றலுக்காக தசைகளை உடைத்தெறியத் தொடங்கி, எடை இழப்பை ஏற்படுத்தும்.
2. கருப்பு திட்டுகள்
அக்குள், கழுத்து போன்ற பகுதிகளில் கருப்பான திட்டுக்களை காண்கிறீர்களா? அப்படியானால் சர்க்கரை நோய் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் எப்போது உடலில் இன்சுலின் அளவு அதிகமாக உள்ளதோ, அப்போது இப்படியான நிலை ஏற்படும். ஆகவே உங்கள் சருமம் திடீரென்று கருமையாக மாறுவதைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
3. தாகம்
எப்போது உடலில் இரத்த சர்க்கரை மிகவும் அதிகமாக உள்ளதோ, அப்போது உடலில் இருந்து அதிகப்படியான க்ளுக்கோஸை வெளியேற்ற சிறுநீரகங்கள் கடினமாக செயல்பட வேண்டியிருக்கும். இதன் விளைவாக மிகுந்த தாகத்தை சந்திக்க நேரிடும். பலரும் இப்படி சந்திக்கும் தாகத்தை நீரிழப்பு அல்லது வெப்பமான காலநிலை காரணமாக இருக்கலாம் என்று தவறாக கருதலாம்.
4. கழுத்து தடிமனாவது
உங்களின் கழுத்துப் பகுதியில் பெரிய மாற்றங்களை காண்கிறீர்களா? அதுவும் உங்களிக் கழுத்துப் பகுதி தடிமனாகி இருப்பதை கண்டால், அது இன்சுலின் எதிர்ப்பின் வலுவான அடையாளமாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கழுத்துப் பகுதியைச் சுற்றியும், தோள்பட்டைகளுக்கு அடிப்பகுதியிலும் கொழுப்புக்கள் தேங்கி தடிமனாக இருந்தால், அது வளர்சிதை மாற்ற நோய்க்குறி மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தின் வலுவான அறிகுறியாகும்.
5. வீங்கிய கால்கள்
கால்களில் வீக்கத்தை காண்கிறீர்களா? அப்படியானால் அது அதிகமான இரத்த சர்க்கரை அளவின் எச்சரிக்கை அறிகுறியாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, எப்போது இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறதோ, அப்போது இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்பட்டு, உடலில் திரவங்கள் குவியத் தொடங்கி, வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே அடிக்கடி கால் வீக்கத்தை சந்தித்தால், சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
6. கால்களில் குத்துவது அல்லது கூசுவது
சர்க்கரை நோய் இருந்தால் தெரியக்கூடிய மற்றொரு பொதுவான அறிகுறி கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு அல்லது குத்துவது போன்ற உணர்வை அதிகம் சந்திக்க நேரிடும். இப்படி சந்திக்கும் பிரச்சனையை சரியாக கவனிக்காமல் விட்டுவிடும் போது, அது டயபெட்டிக் நியூரோபதிக்கு வழிவகுக்கும்.
7. பின் கழுத்து வீக்கம்
கழுத்தின் பின்பிறத்தில் திடீரென்று வீக்கத்தை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு தொடர்பான கொழுப்பு தேக்கத்தின் அறிகுறியாகும். இப்படியான பின் கழுத்து வீக்கத்தை நீங்கள் திரென்று சந்தித்தால், அது உங்களுக்கு சர்க்கரை நோய் வரப்போகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications