Latest Updates
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. சைடு டிஷ்ஷே வேண்டாம்.. -
அக்டோபர் 12 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை பிரச்சினைகள் விடாமல் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navratri 2026: யானை வாகனத்தில் வரும் துர்கா தேவியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிக்காரங்க இவங்க தான்! -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Aani Amavasya 2026: இந்து நாட்காட்டியின் படி, இந்த ஆண்டின் ஆனி அமாவாசை திதியானது ஜூலை 13 ஆம் தேதி மாலை தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் முடிவடையும். எனவே சூரிய உதயத்தின் அடிப்படையில், ஆனி அமாவாசையானது ஜூலை 14 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நம்பிக்கைகளின் படி, அமாவாசை நாளானது முன்னோர்களை வணங்கவும், தானம் செய்வதற்கும் மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

இருப்பினும் இந்நாளில் மற்ற நாட்களை விட எதிர்மறை ஆற்றலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் இந்நாளில் சற்று நிதானமாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். மேலும் ஜோதிடத்தின் படி, இந்த ஆனி அமாவாசை நாளன்று கிரகங்களின் நிலைகளால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் தெரியும். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்நாளில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இப்போது ஆனி மாத அமாவாசை நாளான இன்று எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆனி மாத அமாவாசை நாளில் நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய சொத்துக்களை வாங்கவும், எந்த முதலீடுகளை செய்வதற்கு முன்பும், ஆவணங்களை நன்கு சரிபார்க்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புக்கள் உருவாகலாம். இருப்பினும் கவனக்குறைவுடன் இருந்தால், அந்த வாய்ப்புக்களை இழக்க நேரிடும்.
மிதுனம்
ஆனி மாத அமாவாசை நாளில் மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய விஷயங்களுக்காகக் கருத்து வேறுபாடுகளோ அல்லது தவறான புரிதல்களோ ஏற்படலாம். இப்படியான சூழ்நிலையில் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இன்று எந்த தகராறையும் பெரிதாக்காமல், அமைதியான முறையில் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகுந்த சோர்வை சந்திக்க நேரிடும். எனவே போதுமான ஓய்வை எடுக்க முயற்சி செய்யுங்கள்.
சிம்மம்
ஆனி அமாவாசை நாளில் சிம்ம ராசிக்காரர்கள் தங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற செலவுகளால் பண பிரச்சனைகள் அதிகரிக்கும். சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பணியிடத்தில் அதிகரிக்கும் பொறுப்புக்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். மேலும் அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
ஆனி அமாவாசை நாளான இன்று கன்னி ராசிக்காரர்கள் மன அமைதியை பேண முயற்சிக்க வேண்டும். சிறு விஷயங்களுக்கும் கோப்படுவதையோ, கவலைப்படுவதையோ தவிர்க்க வேண்டும். மன அழுத்தம் ஆரோக்கியத்தை பாதிக்கும். புதிய முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தால், நன்கு விசாரித்த பின் முடிவெடுக்க அறிவுறுத்தப்படுகிறது. எந்தவொரு மோசடியையும் தவிர்க்க விழிப்புடன் இருப்பது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


