Latest Updates
-
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
கருப்பான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க...
Skin Care Tips In Tamil: என்ன தான் கோடைக்காலம் முடிவுக்கு வந்தாலும், இன்னும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாளுக்கு வெயில் சுட்டெரித்துக் கொண்டு தான் உள்ளது. இப்படி வெயில் கொளுத்துவதால், சருமம் மோசமாக பாதிக்கப்பட்டு, பலர் அடையாளம் தெரியாத வகையில் கருமையாக மாறி உள்ளனர். உங்களின் சருமமும் வெயிலால் கருப்பாக மாறியுள்ளதா?

உங்கள் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமா? இதற்காக கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த பல பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருந்தாலும் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லையா? அப்படியானால் நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்டு வாருங்கள்.
அதுவும் நம் வீட்டில் உள்ள உருளைக்கிழங்கைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போடும் போது, அதில் உள்ள அசிட்டிக் தன்மையால், சருமத்தில் உள்ள கருமை மங்கி, சரும நிறம் அதிகரிப்பதைக் காணலாம். இப்போது சருமத்தை வெள்ளையாக்க உதவும் சில உருளைக்கிழங்கு ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து காண்போம்.
ஃபேஸ் மாஸ்க் #1
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன்பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் மாஸ்க் #2
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி ஒருநாள் விட்டு ஒரு நாள் பயப்டுத்தி வர சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
ஃபேஸ் மாஸ்க் #3
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உருளைக்கிழங்கு சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு அதை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர சருமத்தில் உள்ள கருமை நீங்குவதைக் காணலாம்.
ஃபேஸ் மாஸ்க் #4
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கு மற்றும் ஸ்ட்ராபெர்ரியை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மென்மையாக தேய்த்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஃபேஸ் மாஸ்க் #5
* இந்த ஃபேஸ் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து, அத்துடன் பாதி உருளைக்கிழங்கின் சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்தில் உள்ள கருமையைப் போக்குவதோடு, சரும சுருக்கத்தையும் தடுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
