Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Mothers Day 2026: ஒவ்வொருவருக்குமே எவ்வளவு வயதானாலும் இளமையாக காட்சியளிக்க வேண்டுமென்ற ஒரு ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் இதற்காக அதிகம் மெனக்கெடுவார்கள். ஆனால் தாயான பின் பொறுப்புக்களும், கடமைகளும் அதிகரிப்பதால், திருமணத்திற்கு முன் சருமத்திற்கு கொடுத்து பராமரிப்புக்களை, தாயான பின் கொடுக்க முடிவதில்லை. சில தாய்மார்கள் தங்களின் சருமத்தை அழகாகவும், இளமையாகவும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் பல்வேறு க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

ஆனால் என்ன தான் கடைகளில் பல்வேறு ஆன்டி-ஏஜிங் பொருட்கள் விற்கப்பட்டாலும், அனைவருக்குமே அது நல்ல பலனைத் தந்துவிடுவதில்லை. இந்நிலையில் வீட்டின் சமையலறையில் உள்ள சில பொருட்கள் சருமத்தில் மாயங்களைப் புரிந்து, சருமத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவி புரியும்.
இந்த அன்னையர் தினத்தை முன்னிட்டு, எவ்வளவு வயதானாலும் நீண்ட காலம் இளமையாக தெரிய பெண்கள் போட வேண்டிய டாப் 5 நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்க அம்மா இளமையாக காட்சியளிக்க விரும்பினால், இந்த ஃபேஸ் பேக்குகளை அவருக்கு போட்டுவிடுங்கள்.
1. முட்டை வெள்ளைக்கரு மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் ஒரு பௌலில் 1 முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. வாழைப்பழம் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத் துண்டுகளை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறு வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. வெள்ளரிக்காய் மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் வெள்ளரிக்காயை எடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டியை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முறை பயன்படுத்தி வர சருமத்தின் அமைப்பும், இளமைத் தன்மையும் மேம்படும்.
5. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொண்டு, காய்ச்சாத பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications