Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது...
Venus Transit In Uthiram Nakshatra On 29 July 2026: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் ஜூலை 29 ஆம் தேதி உத்திரம் நட்சத்திரத்திற்கு நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுக்கிரன் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை இருப்பார். இந்த உத்திரம் நட்சத்திரத்தின் அதிபதி சூரியன். இந்த நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மிகவும் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் தீரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும்.
மிதுனம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். ஆளுமை மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். காதலித்து கொண்டிருந்தால், திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை புதிய ஆற்றலாலும் உற்சாகத்தாலும் நிரம்பியிருக்கும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மொத்தத்தில் இக்காலம் மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

