Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்..
Venus Transit In Pooram Nakshatra On 16 July 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் உள்ளார். இந்நிலையில் ஜூலை 16 ஆம் தேதி சுக்கிரன் மகம் நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, பூரம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். தனது சொந்த நட்சத்திரத்திற்குள் சுக்கிரன் நுழைவதால், அதன் சக்தி இரட்டிப்பாகி இருமடங்கு நன்மைகள் கிடைக்கப் போகிறது.
சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காணவுள்ளனர். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திப்பார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். சமூகத்திலும், பணியிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்களின் பேச்சு அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும். புதிய வீடு, வாகனம், நகைகள் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
துலாம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். கலை, ஊடகம் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் பொற்காலமாக இருக்கும். செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் நல்ல ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக மேற்கொள்ளப்படும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிப்பதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

