இதய ஆபத்தை துல்லியமாக கண்டறியும் புதிய இரத்த சோதனை: இந்த சோதனையின் பெயர் என்ன தெரியுமா?

Heart Health: உலகில் அதிகளவு மக்கள் மரணிப்பதற்கு காரணமாக இருப்பது இதய நோய்தான். இதய நோய்களால் பெரும்பாலான மக்கள் இறப்பதற்கு காரணம் அதை தாமதமாக கண்டறிவதுதான். இதய நோய்களை மருத்துவர்கள் கணிக்கும் மற்றும் தடுக்கும் முறையை பலமடங்கு மேம்படுத்தக்கூடிய ஒரு எளிய இரத்தப் பரிசோதனை, தற்போது இதய நோய் நிபுணர்களின் தீவிர கவனத்தைப் பெற்று வருகிறது.

Heart Health This Blood Test May Predict Heart Disease Better Than Cholesterol Test

வழக்கமான ஆரோக்கிய பரிசோதனைகளின்போது பெரும்பாலான மக்கள் இன்றும் பாரம்பரியமான கொலஸ்ட்ரால் பரிசோதனையையே சார்ந்திருக்கும் நிலையில், அதைவிடத் துல்லியமான ஒரு மாற்று முறைக்கான நேரம் வந்துவிட்டதாகப் புதிய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவின் 'Northwestern Medicine' நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 'அப்போலிப்போபுரோட்டீன் B' (apoB) எனப்படும் ஒரு புரதத்தின் அளவை அளவிடுவது, வழக்கமான LDL அல்லது non-HDL கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை விட, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கு மிகச் சிறந்த இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

இதய நோய்க்கான அபாயத்தைக் கண்டறிய கொலஸ்ட்ரால் எவ்வாறு உதவுகிறது?

பல ஆண்டுகளாக, இதயம் ஆபத்திலிருப்பதைக் கண்டறிவதற்கு கொலஸ்ட்ரால் பரிசோதனையே சிறந்த முறையாக இருந்து வருகிறது. பெரும்பாலும் "கெட்ட கொலஸ்ட்ரால்" என்று குறிப்பிடப்படும் அதிக அளவிலான LDL, நீண்ட காலமாக இதய நோயைக் கண்டறிவதற்கு சோதனையாக இருந்து வருகிறது. இருப்பினும், இந்த புதிய ஆய்வு ஒரு கொலஸ்ட்ரால் சோதனையின் முக்கிய குறைபாட்டை சுட்டிக்காட்டுகிறது. அது என்னவெனில், ஒரே மாதிரியான கொலஸ்ட்ரால் அளவுகளைக் கொண்ட இருவருக்கு, உண்மையான அபாயத்தின் அளவுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கலாம்.

இதற்கான காரணம், இரத்தத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களின் எண்ணிக்கையில் அடங்கியுள்ளது. வழக்கமான பரிசோதனைகள் கொலஸ்ட்ராலின் அளவை மட்டுமே அளவிடுகின்றன, ஆனால் அந்த கொலஸ்ட்ராலைச் சுமந்து செல்லும் ஆபத்தான லிப்போபுரோட்டீன் துகள்கள் எத்தனை உள்ளன என்பதை அளவிடுவதில்லை. இந்த ஆபத்தான துகள்கள் தமனிச் சுவர்களில் படிந்து, காலப்போக்கில் ஆபத்தான அடைப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

Heart Health This Blood Test May Predict Heart Disease Better Than Cholesterol Test

apoB என்றால் என்ன?

apoB என்பது ஒரு இரத்தப் பரிசோதனையாகும், இது தமனித் தடிப்பு நோயை உண்டாக்கும் துகள்களின் எண்ணிக்கையை அளவிடுகிறது. ஒவ்வொரு தீங்கு விளைவிக்கும் துகளும் சரியாக ஒரு apoB புரதத்தைக் கொண்டுள்ளது, இது இதய நோய் அபாயத்தைக் கண்டறிவதற்கான மிகவும் துல்லியமான ஒரு குறியீடாக அமைகிறது.

"அப்போலிப்போபுரோட்டீன் B (apoB) இரத்தத்தில் உள்ள மொத்த தீங்கு விளைவிக்கும் துகள்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதால், யார் அபாயத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவதில் இது சிறந்தது என்று ஆய்வுகள் கூறுகின்றன," என்று நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஃபைன்பெர்க் மருத்துவப் பள்ளியின் முன்னணி ஆய்வாளர் சியாரன் கோலி-லிஞ்ச் கூறியுள்ளார்.

ஆய்வு எப்படி நடத்தப்பட்டது?

இந்த ஆய்வில், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சிகிச்சை தேவைப்பட்டும், இன்னும் இதய நோய் உருவாகாத 250,000-க்கும் மேற்பட்ட மக்களின் தரவுகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மூன்று அணுகுமுறைகளை ஒப்பிட்டனர். அவை LDL கொலஸ்ட்ரால், Non-HDL கொலஸ்ட்ரால் மற்றும் apoB அளவுகளின் அடிப்படையில் வழிநடத்தப்படும் சிகிச்சையாகும்.

இதன் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. தற்போதைய வழக்கமான முறைகளை விட, apoB-ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த உத்தியானது கணிசமாக அதிகமான மாரடைப்புகளையும் பக்கவாதங்களையும் தடுத்தது. முக்கியமாக, இந்த மேம்பட்ட முடிவுகள், குறைந்த செலவிலேயே கண்டறியப்பட்டன.

உலகளவில் இறப்பிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய் நீடிப்பதால், இந்த புதிய அணுகுமுறை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையின் மூலம் மருத்துவர்கள் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து, சிகிச்சையை மிகவும் திறம்பட வடிவமைக்க முடியும்.

இந்த சோதனை நம்பிக்கையான முடிவுகளை அளித்தபோதும், பெரும்பாலான மருத்துவமனைகளில் apoB பரிசோதனை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதேசமயம் பல மருத்துவர்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் தங்களுக்குப் பழக்கமான LDL அளவீடுகளையே தொடர்ந்து நம்பியிருக்கிறார்கள்.

Journal of the American Medical Association' (JAMA) இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, இதய நோய் தடுப்பு மருத்துவத் துறையில் 'apoB' பரிசோதனையானது ஒரு புதிய மைல்கல்லாக இருக்குமென்று கூறுகிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Friday, April 17, 2026, 14:52 [IST]
Desktop Bottom Promotion