Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்..
White Soya Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் செய்ய காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரை கொண்டு வெள்ளை சால்னா செய்யுங்கள். இந்த சால்னா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். அதுவும் இந்த சால்னா சப்பாத்தி, பூரி, பரோட்டா என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வெள்ளை மீல் மேக்கர் சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளை மீல் மேக்கர் சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 1 கப்
* சுடுநீர் - தேவையான அளவு
* புளிப்பில்லாத கெட்டி தயிர் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1 பெரிய துண்டு
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 4 (நறுக்கியது)
* முந்திரி - 10
தாளிப்பதற்கு...
* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துடு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* பிரியாணி இலை - 1
* அரைத்த மசாலா
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
* ஊற வைத்த மீல் மேக்கர்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரை எடுத்துக் கொண்டு,
சுடுநீரை ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை
பிழிந்துவிட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் புளிப்பில்லாத கெட்டி தயிர், மிளகுத் தூள்,
எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு பிரட்டி 10
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் முந்திரியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, மிளகுத் தூள் மற்றும்
சிறிது உப்பு சேர்த்து கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து
குறைவான தீயில் 3 நிமிடம் எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த மீல் மேக்கரை சேர்த்து கிளறி, குறைவான
தீயில் வைத்து மூடி வைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூள், கசூரி மெத்தி, சர்க்கரை
மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெள்ளை மீல்
மேக்கர் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
