Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன?
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்..
Mango Benefits In Tamil: கோடைக்காலம் வந்தாச்சு.. பழங்களின் ராஜாவான மாம்பழம் சீசனும் தொடங்கியாச்சு.. ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் மாம்பழ சீசன் என்பதால், மார்கெட்டிற்கு சென்றாலே பலவிதமான மாம்பழங்களை காணலாம். பார்த்ததும் கண்களை கவரும் நிறத்துடனும், ஆளை மயக்கும் மணத்துடனும் இருக்கும் மாம்பழத்தை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மாம்பழம் சாப்பிட பலரும் அச்சம் கொள்வதோடு, தவிர்த்தும் வருகிறார்கள். அதுமட்டுமின்றி, தற்போது கெமிக்கல் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைத்தும் விற்று வருகின்றனர். இப்படி செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் சுவையின்றி இருப்பதோடு, உடலுக்கு நன்மைகளுக்கு பதிலாக கேடு விளைவிக்கின்றன.

நீங்கள் மாம்பழம் பிடித்தும் அதை சாப்பிடாமல் தவிர்த்து வருகிறீர்களா? கோடையில் விலை மலிவில் கிடைக்கும் சுவையான மாம்பழத்தை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதுக்குறித்து டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் மாம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளையும், மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?
அதில் அவர் கூறியதாவது, "மாம்பழத்தை எல்லாரும் சாப்பிடலாமா? சர்க்கரை நோயாளிகள் கூட சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும். தற்போது சூப்பரான சீசன். ஏப்ரல் முதல் ஜூன் முதல் வாரம் வரை கிடைக்கக்கூடிய ஒரு சீசனல் பழம் தான் மாம்பழம். இந்த சீசனில் கிடைக்கக்கூடிய மாம்பழத்தை சரிவிகித உணவுமுறையை பின்பற்றி, சர்க்கரை நோயாளியாக இருந்தாலும் ஒரு துண்டு மாம்பழம் சாப்பிடுவதால் எந்த தவறும் இல்லை. முழு மாம்பழத்தை சாப்பிட்டால் தான் சுகர் அதிகரிக்கும். ஒரு துண்டு சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது" என்று கூறினார்.
புற்றுநோய் தடுக்கப்படும்
"மாம்பழத்தில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. அதுவும் இதில் கேலடோனின், மேக்னிஃபெரின் என்னும் சக்தி வாய்ந்த இரண்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்றுநோய் வராமல் தடுக்கும் வல்லமை பெற்றது" என்று கூறினார். ஆகவே புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க நினைத்தால், மாம்பழத்தை கோடையில் தவறாமல் சாப்பிடுங்கள்.
மலச்சிக்கல் நீங்கும்
"மாம்பழத்தில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே இது மலச்சிக்கல் வராமல் தடுக்க பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார். கோடையில் உங்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுமானால், அதிலிருந்து எளிதில் விடுபட ஒரு மாம்பழத்தை சாப்பிடுங்கள் போதும்.
கண்கள் மற்றும் சருமத்திற்கு நல்லது
"மாம்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கும், கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது" என்று கூறினார். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. இந்த கொலாஜன் சருமத்தை நெகிழ்வுத்தன்மையுடனும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டீன் என்னும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. அதாவது கண்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவி புரிகிறது.
இதயத்திற்கு நல்லது
"மாம்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க வல்லது" என்று டாக்டர் கூறினார். அதுவும் இதில் உள்ள மேக்னிஃபெரின் என்னும் குறிப்பிட்ட பாலிஃபீனால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும், கொழுப்புக்களின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே கோடையில் மாம்பழம் சாப்பிட தவிர்க்காதீர்கள்.
மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்
1. மாம்பழம் வாங்கும் போது அதன் தோலின் நிறத்தை பார்ப்பதை விட, அதன் வாசனையை கவனிக்க வேண்டும். அதுவும் அதன் தண்டு பகுதியில் நல்ல வாசனை வந்தால், மாம்பழம் நன்கு கனிந்துள்ளது என்று அர்த்தம்.
2. மாம்பழத்தின் எடையை கவனிக்க வேண்டும். நல்ல பழுத்த மாம்பழமாக இருந்தால், எடையுடன் இருக்கும்.
3. மாம்பழத்தின் நிறத்தைப் பொறுத்தவரை, பச்சை மற்றும் மஞ்சள் கலந்து இருக்க வேண்டும். இப்படி இருந்தால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்று அர்த்தம். மாம்பழம் செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டதென்றால், ஒன்று மாம்பழத்தின் நிறம் நன்கு மஞ்சள் நிறத்தில் பளபளவென்று இருக்கும் மற்றும் அதிக எடையுடன் இருக்காது. மேலும் மாம்பழத்தில் இருந்து எந்த வாசனையும் வராது. இப்படி வாசனையின்றி, எடை குறைவாகவும், மஞ்சள் நிறத்திலும் இருந்தால், அந்த மாம்பழத்தை வாங்காதீர்கள். அது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதாக இருக்கலாம்.
எனவே நண்பர்களே! இதுவரை நீங்கள் மாம்பழம் பிடித்தும் சாப்பிடாமல் இருந்தால், இனிமேல் அப்படி இருக்காமல், ஒரு துண்டாவது சாப்பிடுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


