Latest Updates
-
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? டாக்டர் என்ன சொல்றாரு-ன்னு பாருங்க..
Mango and Diabetes: கோடைக்காலம் வந்தாலே மாம்பழம் தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஏனெனில் இக்காலத்தில் மாம்பழம் சீசன் தொடங்குவதால், பல வகையான மாம்பழங்கள் விலைக் குறைவில் மார்கெட்டுகளில் விற்கப்படும். பழங்களில் நிறைய பேருக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும். இதற்கு அதன் மணமும், தித்திக்கும் சுவையும் ஒரு முக்கிய காரணம்.
ஆனால் இந்த மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து மக்களிடையே உள்ளது. இதனால் மாம்பழம் பிடித்தும் சர்க்கரை நோய் இருக்கும் காரணத்தினால், நிறைய பேர் மாம்பழத்தை சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடக்கூடாதா என்பது குறித்து உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அது என்னவென்பதை காண்போம் வாருங்கள்.

அதில் அவர் கூறியதாவது, "பொதுவாக இனிப்பாக இருக்கும் பொருட்களை உட்கொண்டால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். அதே சமயம் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நிறைந்த பொருட்களை உட்கொண்டால், தீவிரமாகிவிடும் என்று நினைக்கின்றனர். முக்கியமாக மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையும் மக்களிடையே உள்ளன.
ஆனால் 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரிகளும், 15 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், 1.5 கிராம் நார்ச்சத்தும் உள்ளன. இந்த 15 கிராம் கார்போஹைட்ரேட்டில் 8-9 கிராம் சுக்ரோஸும், 4-5 கிராம் புருக்டோஸும், 2 கிராம் குளுக்கோஸும் உள்ளன. அதே சமயம் 100 கிராம் சாதத்தை எடுத்துக் கொண்டால், அதில் 130 கலோரிகளும், 28 கிராம் கார்போஹைட்ரேட்டுகளும், நார்ச்சத்து எதுவும் இல்லை, பெரும்பாலும் ஸ்டார்ச் என்னும் மாவுச்சத்து தான் அதிகம் உள்ளன.
எனவே சாதாரண சாதத்துடன் ஒப்பிடுகையில் மாம்பழம் பாதிக்கு பாதி தான் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும் இனிப்பு இல்லை என்று நினைக்கும் சில பழங்களுடன் ஒப்பிடுகையிலும் மாம்பழத்தில் உள்ள சர்க்கரையை விட 10 சதவீதம் தான் குறைவான அளவில் சர்க்கரை உள்ளது.
எனவே மிதமான இரத்த சர்க்கரையைக் கொண்டவர்கள், அதாவது HbA1c அளவு 6-7 என்று இருந்து, உணவில் ஓரளவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருபவராக இருந்தால், 100 கிராம் சாதத்தை சாப்பிடுவதை விட 100 கிராம் மாம்பழத்தை சாப்பிடலாம். அதுவே HbA1c அளவு 10-க்கு மேல் இருந்தால், எந்த வகையான மாவுச்சத்தையும் எடுத்துக் கொள்ளக்கூடாது." என்று கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களுக்கு சர்க்கரை நோய் மிதமான அளவில் இருந்து, விரும்பிய மாம்பழத்தை தொட்டுக் கூட பார்க்காமல் இருந்தால், இனிமேல் அந்த கஷ்டத்தைப் படாமல், ரசித்து ருசித்து சாப்பிடுங்கள். ஆனால் எந்த உணவிலும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
ஆம், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் மிதமாகவும், அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும் வேண்டும்.
மாம்பழத்தில் வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைவருக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த மாம்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சிறிய அளவுகளில் அல்லது புரதம் அல்லது ஆரோக்கியமான கொழுப்புகளுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications