Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
அக்டோபர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்ப கவலையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 19-ல் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த 4 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
ராகுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
உடுப்பி ஸ்டைல் கொள்ளு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு சாப்பிடுங்க - எடை டக்குனு குறையும் -
ஒரே ஃபேஸ் பேக்கில் முகம் பளிச்சுன்னு ஆகணுமா? அப்ப இந்த தக்காளி ஃபேஸ் பேக் போடுங்க..
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது!
Akshaya Tritiya 2026: இந்து மதத்தில் அட்சய திருதியை மிகவும் மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்நாள் தங்கம் வாங்க மிகவும் சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த சுப தினமானது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டின் அட்சய திருதியை ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருமப்படுகிறது. ஏனெனில் இந்நாளில் ஏராளமான பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்கள் உருவாகின்றன. இப்படி ஒரு சுப தினத்தில் பல ராஜயோகங்கள் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இதன் விளைவாக வாழ்வில் செல்வம் குவிவதோடு, முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைப்பதாக நம்பப்படுகிறது.

அட்சய திருதியை தேதி மற்றும் நல்ல நேரம்
இந்த ஆண்டின் அட்சய திருதியை இரண்டு நாட்கள் நீடித்திருக்கும். அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 10:49 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 7:27 மணி வரை நீடித்திருக்கும். இருப்பினும், திதியின் தொடக்க தினத்தில் தான் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. எனவே இந்த தினத்தில் பூஜைகளை செய்யவும், தானம் செய்யவும் சிறந்த நேரம் என்றால், அது காலை 10:49 மணி முதல் மதியம் 12:20 மணி வரையிலான நேரம் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
தங்கம் வாங்க சிறந்த நேரம் மற்றும் எந்த பொருட்களை வாங்கலாம்?
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்குவது தான் நினைவிற்கு வரும். இந்நாளில் இப்படி தங்கம் வாங்குவதன் முக்கியத்துவ என்னவென்றால், அட்சயம் என்றால் ஒருபோது அழியாது என்று பொருள். எனவே இந்நாளில் விலை மதிப்புமிக்க தங்கத்தை வாங்கினால், அது அழியாது பெருகும் என்ற நம்பிக்கையில் மக்கள் இந்நாளில் தங்கத்தை வாங்குகின்றனர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க சிறந்த நேரம் என்றால் அது ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 10:49 மணி முதல், ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 05:51 மணி வரை ஆகும். அதுவும் இந்நாளில் தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. தற்போதைய தங்கம் விற்கும் விலைக்கு அனைவராலும் தங்கம் வாங்க முடியாது. அப்படி தங்கம் வாங்க முடியாதவர்கள் வெள்ளி, பித்தனை, புதிய நிலம், வீடு, வாகனம் என்று எது வேண்டுமானாலும் வாங்கலாம்.
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் 5 ராஜயோகங்கள்
2026 ஆம் ஆண்டின் அட்சய திருதியை நாளில் எதிர்பாராத விதமாக 5 தெய்வீகமான ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அந்த ராஜயோகங்களாவன:
கஜகேசரி யோகம்: குரு மற்றும் சந்திரன் ஒன்றிணைவதால் உருவாகும் கஜகேசரி யோகத்தால், மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திரிபுஷ்கர யோகா: இந்த யோக காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் மூன்று மடங்கு பலன்களைத் தரக்கூடிய அளவில் மங்களகரமானது.
சர்வார்த்த சித்தி யோகம்: முதன்மைக் கடவுளான விநாயகருடன் தொடர்புடைய இந்த யோக காலத்தில் எந்த ஒரு வேலையை தொடங்கினாலும், அது தடையின்றி வெற்றிகரமாக நடக்கும்.
சச மற்றும் மாளவ்ய ராஜயோகம்: சனி மற்றும் சுக்கிரனால் உருவாகக்கூடிய இவ்விரு யோகங்களும் தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ரவி யோகம்: நல்ல ஆரோக்கியத்தையும், சமூகத்தில் மதிப்பு மரியாதையையும் பெற இந்த யோகம் வழிவகை செய்யும்.
அட்சய திருதியை 2026: அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளில் உருவாகும் 5 ராஜயோகங்களால் 5 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் மேஷம், ரிஷபம், சிம்மம், கும்பம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் இந்நாளில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். மொத்தத்தில் குபேரரின் அருளால் செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


