Latest Updates
-
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்!
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!
Akshaya Tritiya 2026: இந்த ஆண்டு மிகவும் மங்களகரமான அட்சய திருதியை நாளானது ஏப்ரல் 19 ஆம் தேதி வருகிறது. அதுவும் இந்த ஆண்டின் அட்சய திருதியை தினமானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்நாளில் தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவானும், மனதின் காரணியான சந்திரனும் ஒன்றிணைந்து கஜகேசரி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
ஜோதிடத்தில், இந்த யோகமானது மிகவும் மங்களகரமான யோகங்களுள் ஒன்றாகும். இந்த யோகம் செல்வம், அந்தஸ்து, தொழில் முன்னேற்றம் போன்றவற்றை வழங்கக்கூடியது. இப்படியான சிறப்பான யோகம் புனிதமான அட்சய திருதியை அன்று உருவாவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக 4 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மன அழுத்தம் நீங்கி, மன அமைதி அதிகரிக்கும். பெற்றோருடனான உறவு மேம்படும். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக உணர்வீர்கள். உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் காதலை வெளிப்படுத்துவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் பண வரவு அதிகரிக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிதாக முதலீடுகளை செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புது வீடு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுவரை சந்தித்து வந்த மருத்துவ செலவுகள் குறையும்.
தனுசு
அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை சிறக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்து முயற்சித்தால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமை மேம்படும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய நண்பர்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நண்பர்களால் நல்ல ஆதாயங்களையும் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



