Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
மழைக்காலத்தில் பார்லர் போக நேரமில்லையா? அப்ப இந்த 5 ஃபேஸ் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்..
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது..
April 2026 Planet Transits: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். அப்படி கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் தான் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருக்கும் ஒவ்வொரு மாதிரி உள்ளது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் அதன் தாக்கம் தெரியும்.
முக்கியமாக இந்த ஏப்ரல் மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதுவும் இம்மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார். அதில் முதலாவதாக ஏப்ரல் 02 ஆம் தேதி செவ்வாய் மீன ராசிக்கும், ஏப்ரல் 11 ஆம் தேதி புதன் மீன ராசிக்கும், ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசிக்கும், இறுதியாக ஏப்ரல் 30 ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கும் நுழைவுள்ளார்.

இப்படியாக கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது ஏப்ர மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதமானது மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் எதிர்பார்த்த சில முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் வெற்றிகரமாக நடக்கும்.
மிதுனம்
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றத்தையும், வருமான உயர்வையும் காணக்கூடும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் விருச்சிக ராசிக்காரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
தனுசு
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் தனுசு ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தாலோ அல்லது வேலையை மாற்றும் எண்ணம் இருந்தாலோ, இம்மாதத்தில் நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை வெற்றி கிடைக்கும்.
கும்பம்
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை இதுவரை சந்தித்து வந்தால், இம்மாதத்தில் அதிலிருந்து விடுபட்டு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

