Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது..
Venus Transit In Rohini Nakshatra 2026: ஜோதிடத்தில் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட வருகிற ஏப்ரல் மாதத்தில் தனது சொந்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
அதுவும் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது ஏப்ரல் 27 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நட்சத்திரத்தில் மே 08 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். இருப்பினும், 4 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

பொதுவாக சுக்கிரன் தனக்கு மிகவும் பிடித்த ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால், அது தனிப்பட்ட வாழ்க்கையில் ஸ்திரத்தன்மையையும், சந்தோஷத்தையும் அதிகரிக்கும். மேலும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இப்போது ரோகிணி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். சொந்த நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் ரிஷப ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் சில முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கடகம்
ரோகிணி நட்சத்திரத்திற்கு சுக்கிரன் செல்வதால் கடக ராசிக்காரர்களும் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணியிடத்தில் ஒரு சாதனையை புரிவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்க நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும்.
தனுசு
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இக்காலம் அதற்கு ஏற்றதாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும் மற்றும் அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

