Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
சொந்த நட்சத்திரம் செல்லும் கேது: மார்ச் 29 முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ் அனைத்தும் கிடைக்கப்போகுது..
Ketu Nakshatra Transit On 29 March 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் எவ்வளவு முக்கியமானதோ, அதேப் போல் அதன் நட்சத்திர மாற்றமும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் தான் கேது.
இந்த கேது ஒரு மர்மமான மற்றும் ஆன்மீக கிரகமாகக் கருதப்படுகிறது. இது திடீர் மாற்றங்கள், செயல்களின் விளைவுகள் மற்றும் அக வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கும் கிரகம். இந்த கேதுவிற்கு மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லாவிட்டாலும், நட்சத்திரம் உள்ளது. அப்படி கேதுவின் நட்சத்திரம் தான் மகம். இந்த மகம் நட்சத்திரமானது சூரிய பகவானின் சிம்ம ராசியில் உள்ளது.

இந்த மகம் நட்சத்திரத்திற்கு கேது மார்ச் 29 ஆம் தேதி செல்லவுள்ளார். இப்படி சொந்த நட்சத்திரத்திற்கு கேது செல்வதால், அதன் தாக்கம் பல ராசிக்காரர்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களையும், புதிய வாய்ப்புகளையும், முன்னேற்றத்திற்கான வழிகளையும் கொண்டு வரக்கூடும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வெற்றியுடன், நிதி ஆதாயங்களையும் பெறவுள்ளனர். இப்போது சொந்த நட்சத்திரத்திற்கு கேது செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், இக்காலம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில முக்கியமான முடிவுகளை திறம்பட யோசித்து எடுப்பீர்கள். தடைபட்ட வேலைகள் படிப்படியாக நடக்க தொடங்கி, வெற்றிகரமாக முடிவடையும். சிலருக்கு புதிய தொழிலை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
சிம்மம்
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வோ அல்லது புதிய பொறுப்புக்களோ வழங்கப்படலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைப்பதோடு, வெளிநாட்டில் தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வீட்டு சூழல் இனிமையாக இருக்கும். ஒவ்வொரு வேலையையும் எளிதில் முடிப்பீர்கள்.
தனுசு
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்கள் ஒவ்வொதுரு வேலையிலும் வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



