April Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...

April Month Rasi Palan 2026: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டின் நான்காவது மாதமான ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் ஏப்ரல் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.

உங்களுக்கு 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் ஏப்ரல் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என ஏப்ரல் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2026 ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

April Month Rasi Palan 2026 April 2026 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைத் தரப் போகிறது. நீண்ட காலமாக இருந்த சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், இம்மாதத்தில் முயற்சித்தால் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் உங்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில் ராகு உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளார். வேலை தேடிக் கொண்டிருந்தால், இம்மாதத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல வரன் அமையும்.

மிதுனம்

புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதமானது உங்களுக்கு மிகவும் பொற்காலமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதோடு சம்பள உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீண்ட கால ஆசைகள் இம்மாதத்தில் நிறைவேறக்கூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் ஆசை இருந்தால், இம்மாதத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் சுப கிரகங்கள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருப்பதால், இந்த மாதத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். இதுவரை உறவுகளில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள நேரிடும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நிதி நிலை மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! அஷ்டம சனி நடப்பதால் ஏப்ரல் மாதத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். ஆனால் குரு பகவானின் சுப பார்வை விழுவதால், இதுவரை சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் குறையும். பண வரவு அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். வருமானத்திலும் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் உங்களின் தைரியம் அதிகரிக்கும். எவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும், அதை சமாளிக்கும் ஆற்றலுடன் இருப்பீர்கள். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். உடல்நல பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், இம்மாதத்தில் ஆரோக்கியம் மேம்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதம் உங்களுக்கு அற்புதமான மாதமாக இருக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இம்மாதத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் இருந்த மந்தநிலை விலகும். பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி இருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் குரு பகவானின் சுப பார்வையால் உங்கள் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். அரசு வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! ஏப்ரல் மாதத்தில் உங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணங்களால் நல்ல நிதி ஆதாயமும் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைப்பதோடு, இம்மாதத்தில் மிகவும் உதவியாகவும் இருப்பார்கள். ஆனால் புதிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! ஏழரை சனியில் ஜென்ம சனியால் இதுவரை சிரமப்பட்டு வந்தால், ஏப்ரல் மாதத்தில் அந்த சனியின் தாக்கம் சற்று குறைந்து, நிலைமை சீராகும். பண வரவு ஓரளவு அதிகரிக்கும். ஆனால் பேச்சில் நிதானம் மிகவும் அவசியம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலை, இம்மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! ஏழரை சனி நடப்பதால் ஏப்ரல் மாதத்தில் அந்த சனியின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், நன்கு யோசித்து எடுக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைக்காவிட்டாலும், பொறுமையாக இருந்தால், நிச்சயம் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, March 24, 2026, 12:20 [IST]
Desktop Bottom Promotion