Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்...
Neech Bhang Rajyog On April 2026: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர். இப்படி புதனின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 11 ஆம் தேதி புதன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மீன ராசியானது புதன் நீச்சமடையும் ராசியாகும். இந்த ராசிக்கு புதன் செல்வதால் சில ராசிக்காரர்கள் சற்று மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

ஆயினும் இந்த ராசியின் அதிபதியான குரு பகவான் கேந்திர வீட்டில் உள்ளார். இதனால் புதன் மற்றும் குருவால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர்.
நீச்சபங்க ராஜயோகம் எப்படி உருவாகும்?
ஜோதிடத்தின் படி, நீச்ச அடைந்த கிரகம் இருக்கும் ராசியின் அதிபதி 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அல்லது 1, 5, 9 ஆகிய திரிகோண வீடுகளில் இருந்தால், நீச்சபங்க ராஜயோகம் உருவாகும். அந்த வகையில் புதன் மீன ராசியில் உள்ளது. இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவானுக்கு, புதன் கேந்திர வீடான 4 ஆம் வீட்டில் உள்ளார். இதனால் நீச்சபங்க ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்போது புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டு பேசும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் திறமையை பாராட்டுவார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆயினும் தேவையற்ற ஆணவத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மீனம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் ஒவ்வொரு துறையிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். சிந்திக்கும் திறன் மேம்படும். நினைவாற்றல் வலுபெறும். பொறுமையாக செயல்பட்டால் வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பொறுமையுடனும், சமநிலையுடனும் செயல்பட்டால் நல்ல வெற்றியைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


