Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
சுக்கிர பெயர்ச்சி: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Transit In Aries On 26 March 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு ராசியில் 18-28 நாட்கள் வரை இருப்பார். கிரகங்களில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல ஆடம்பரமான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ்வார். தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் இறுதியில் சுக்கிரன் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயின் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசியில் நுழைந்து, ஏப்ரல் 19 ஆம் தேதி வரை இருந்து பின் ரிஷப ராசிக்குள் நுழைவார். இந்த மேஷ ராசிக்கு சுக்கிரன் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியை பெறுவதோடு, நிதி ரீதியாகவும் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற கனவு இருந்தால், அது சுக்கிரனின் அருளால் நிறைவேறும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். பணியிடத்தில் புதிய யோசனைகளால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும்
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவற்கான வாய்ப்புள்ளது. எனவே அதில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.
புதிய தொழிலை தொடங்க இக்காலம் சிறந்ததாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


