Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Venus Transit In Aries On 26 March 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் ஒரு ராசியில் சுமார் 26 நாட்கள் வரை இருப்பார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணித்து வருகிறார். தனது உச்ச ராசியில் பயணித்து வரும் சுக்கிரன், மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையுவுள்ளார். இந்த மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாயின் ராசிக்குள் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

வேத நாட்காட்டியின் படி, மார்ச் 26 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையும் சுக்கிரன், அந்த ராசியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வரை இருப்பார். இப்படி மேஷ ராசியில் சுக்கிரன் நுழைவதால் சில ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது மேஷ ராசிக்கு செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ர சிக்காரர்களின் பல ஆசைகள் நிறைவேறும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இதனால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும்.
வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அழுத்தம் குறையும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும்.
நிதி ரீதியாக இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சேமிக்க முடியும். வணிகர்களின் உத்திகள் வெற்றியையும், லாபத்தையும் தரும். பல புதிய ஆர்டர்கள் வந்து குவியும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள் மற்றும் அவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் உங்களின் இலக்கை அடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். மனதில் அமைதி அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைப் பெறுவார்கள். உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். தொழிலில் உங்களின் புதிய திட்டங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தரும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி ரீதியாக நல்ல உயர்வு ஏற்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

