Latest Updates
-
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 மார்ச் 15 ஆம் தேதி முதல் 2026 மார்ச் 21 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். புதிய முதலீடுகளை செய்ய இந்த வாரம் சிறந்ததாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். ஆனால் மனம் சற்று பதட்டமாக இருக்கும். எனவே மன அமைதியை பேண முயற்சிக்க வேண்டும். பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வேலையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் சில அழுத்தங்களை சந்திப்பதோடு, அதிக பொறுப்புக்களையும் பெறக்கூடும். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆனால் செலவுகள் சற்று அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். புதிய உறவுகள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் நிறைந்ததாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இந்த வாரத்தில் தேவையற்ற மன அழுத்தத்தை தவிர்த்து, வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். நினைத்த வேலைகள் ஒவ்வொன்றும் எதிர்பார்த்தவாறு முடிவடையும். புதிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரிடையே வாக்குவாதங்களும் அதிகரிக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நிதி இழப்புகளுக்கு வாய்ப்புள்ளதால், கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய வீடு, வாகனம் வாங்க நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனையை முதலில் பெறுவது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். இடமாற்றம் மற்றும் பயணங்களுக்கான வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். நிதி ரீதியாக இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் எதிர்பார்த்த ஒரு விஷயம் இந்த வாரத்தில் நடக்கலாம். செலவுகள் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்வது நல்ல லாபத்தைத் தரும். புதிய நண்பர்கள் அல்லது உறவினர்களைப் பெறக்கூடும். வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வெற்றிகள் குவியும். முக்கியமான ஒன்றை அடைவீர்கள். தேவையற்ற பயங்களும், கவலைகளும் அடிக்கடி எழும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தேவையற்ற சண்டைகளை தவிர்க்க வேண்டும். சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளின் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். பயணங்கள் தொந்தரவாக இருக்கும். எனவே இந்த வாரத்தில் அதைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் மிகுந்த மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் சந்திப்பீர்கள். இந்த வாரத்தில் உங்களின் விடாமுயற்சியும், பொறுமையும் சோதிக்கப்படும். இருப்பினும் உங்களின் கடின உழைப்பு நேர்மறையான பலன்களைத் தரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













