Latest Updates
-
Mothers Day 2026: உங்க அம்மாவுக்கு இந்த 'உயிர்காக்கும் மருத்துவ பரிசோதனைகள்' பரிசா குடுங்க.. ஹேப்பி ஆவாங்க.. -
வைகாசி மாதம் சூரியனின் ஆசியால் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
அன்னையர் தின ஸ்பெஷல் பெப்பர் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து அம்மாவுக்கு செஞ்சு குடுத்து அசத்துங்க! -
இன்றைய ராசிபலன் 10 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துகள் துரத்தப்போகுதாம் -
சூரியன் சுக்கிரனின் ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஒருதடவை ரசம் வைச்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
விஜய் - திரிஷா வீடியோ: இது வெறும் நட்பா? இணையத்தை அதிரவைக்கும் அந்த வைரல் தருணம்! -
வார ராசிபலன் (10 May 2026-16 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவை தட்டுமாம் -
பட்டப்பகலில் நடந்த கொடூரம்! பெங்களூரு சம்பவத்திற்குப் பின் பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு ரகசியங்கள்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் பெப்பர் வறுவல் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்..
Mars Rise In Aquarius On 26 March 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுமட்டுமின்றி அவ்வப்போது அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார். அப்படி செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் இதுவரை செவ்வாய் அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில் மார்ச் 26 ஆம் தேதி சனி பகவானின் கும்ப ராசியில் செவ்வாய் உதயமாகவுள்ளார். ஜோதிடத்தில் சனிக்கும், செவ்வாய்க்கும் பகை உணர்வு உள்ளது. இத்தகைய கும்ப ராசியில் செவ்வாய் உதயமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

முக்கியமாக சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் நிறைய சவால்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக தொழிலிலும், பண விஷயத்திலும் வழக்கத்தை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதோடு அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்போது சனி பகவானின் கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாயால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் மிதுன ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியிலும் தடைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். அதோடு ஒவ்வொரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். முதலீடுகளை செய்யும் முன் அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் மகர ராசிக்காரர்கள் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். குடும்பத்தில் மனக்கசப்புகள் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதையும் அவசரமாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். பொறுமை அவசியம். நிதானமாக செயல்படாமல் இருந்தால், பெரிய பிரச்சனையில் சிக்கி அவதிப்பட நேரிடும். ஒவ்வொரு வேலையையும் மிகுந்த எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாவதால் மீன ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறைய செலவுகளை சந்திக்க நேரிடும். இதனால் பண பிரச்சனையால் சிரமப்படக்கூடும். இக்காலத்தில் விதிகளை மீறுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். பேச்சை கட்டுப்படுத்தாவிட்டால், அதுவே பெரிய சிக்கலில் சிக்க வைத்துவிடும். பணியிடத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலை பறிபோகலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


