Latest Updates
-
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம்
செவ்வாயால் உருவாகும் லாப யோகம்: ஏப்ரலில் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது..
Mars Uranus Make Labh Yog On April 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுழுவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஏப்ரல் 02 ஆம் தேதி செவ்வாய் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 11 ஆம் தேதி செவ்வாயும், யுரேனஸும் ஒன்றுக்கொண்டு 60 டிகிரியில் இருந்து, ஒரு சுப யோகத்தை உருவாக்கவுள்ளன. அது தான் லாப யோகம். வேத ஜோதிடத்தில் இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக இந்த யோகத்தால் 5 ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது செவ்வாய் யுரேனஸ் மூலம் உருவாகும் லாப யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
லாப யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நல்ல நிதி வளர்ச்சியைக் காண்பார்கள். மேலும் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்தும் எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கடனில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். இதன் மூலம் மனம் மகிழ்ச்சி அடையும்.
கடகம்
ஏப்ரலில் உருவாகும் லாப யோகத்தால் கடக ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள். தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம்
லாப யோகத்தால் ஏப்ரல் மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. தொழிலதிபர்கள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். படைப்பாற்றலும், தலைமைப்பண்புகளும் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் லாப யோகத்தால் தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். பல புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுகள் வலுபெறும். முயற்சிகளுக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லாப யோகத்தால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணப்பிரச்சனைகள் தீரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான உறவு வலுபெறும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். வணிக முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

