Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
கும்ப ராசியில் உதயமாகும் செவ்வாய்: மார்ச் 26 முதல் இந்த 6 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
Mars Rise In Aquarius On 26 March 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஸ்தமனமாகி உதயமாகவும் செய்வார். இப்படி செவ்வாய் அஸ்தமன நிலையில் இருக்கும் போது, பலவீனமாக இருப்பார். இதனால் செவ்வாயால் கிடைக்கவிருக்கும் நற்பலன்கள் தாமதமாகும். அந்த வகையில் செவ்வாய் 2025 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அஸ்தமனமானார்.

இந்நிலையில் 2026 மார்ச் 26 ஆம் தேதி செவ்வாய் உதயமாகவுள்ளார். இப்படி செவ்வாய் கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் உதயமாவதால், மார்ச் மாத இறுதியில் செவ்வாயின் முழு பலம் வெளிப்பட்டு, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 6 ராசிக்காரர்கள் செவ்வாய் உதயமாவதால் நல்ல அதிர்ஷ்டத்தையும், தொழிலில் முன்னேற்றத்தையும், நிதி நிலையில் உயர்வையும் காணவுள்ளனர். இப்போது செவ்வாய் கும்ப ராசியில் மார்ச் 26 ஆம் தேதி உதயமாவதால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, வழிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வேலையில் திட்டங்களை மாற்றி செயல்பட்டால் நிறைய லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்கள் தங்கள் இலக்குகளை அடைவார்கள் மற்றும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் குவியும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணக்கூடும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. போட்டியில் வெற்றி பெறுவீர்கள். முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். பணியிடத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைத்து, அதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் அனைத்தும் சாதகமாக அமையும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகத்தில் உள்ள தடைகள் நீங்கும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை நல்லபடியாக முடிவடையும். தொழிலை தொடங்குவதில் இருந்த தடைகள் நீங்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். எந்த துறையில் இருந்தாலும், சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். தொழிலில் போட்டியாளர்களை வென்று நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமை வலுவடையும். பணிபுரிபவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மேலும் வெளிநாட்டில் பணிபுரியும் ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் தேடி வரும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார். இதனால் வேலை மற்றும் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் ஆடம்பரமான வாழ்க்கையையும் வாழ்வீர்கள். வியாபாரிகளுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஏற்கனவே பங்குச் சந்தையில் முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



