Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
பிப்ரவரி கடைசியில் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பெரிய இழப்பு ஏற்படும்.. உஷார்..
Mars Transit In Aquarius On 23 February 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேலும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட. தற்போது செவ்வாய் சனி பகவானின் மகர ராசியில் பயணித்து வருகிறார்.
பொதுவாக செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். ஒருவரது ஜாதத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் தைரியமாகவும், துணிச்சல்மிக்கவராகவும் இருப்பார். இப்படிப்பட்ட செவ்வாய் நீதிமான் சனி பகவானின் ராசியில் இருப்பதோடு, பிப்ரவரி கடைசியில் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.

செவ்வாயும் சனியும் நட்பாக இல்லாததால், இந்த செவ்வாய் கும்ப ராசிக்கு வருவது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். மேலும் பல இழப்புக்களையும் சந்திக்க வைக்கும். வேத நாட்காட்டியின் படி, செவ்வாய் பிப்ரவரி 23 ஆம் தேதி கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த கும்ப ராசியில் செவ்வாய் ஏப்ரல் 02 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்குள் நுழைவார். இதனால் இக்காலகட்டத்தில் 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவசரப்படுவதைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். இப்போது கும்ப ராசிக்கு செல்லும் செவ்வாயால் எந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும். யாரிடமும் கடன் வாங்கி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையில் அதிருப்தி உணர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். இதனால் குடும்ப வாழ்க்கை பதட்டம் நிறைந்தாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் உறவுகளில் பதட்டம் அதிகரிக்கும். பழைய விஷயங்களால் அதிகம் கவலைப்படக்கூடும். அதிக கோபம் வரும். இந்த கோபத்தால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். எந்த ஒரு முக்கியமான விஷயங்களையும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும் எந்த விஷயத்திலும் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். நண்பர்களிடம் இருந்து கெட்ட செய்திகளைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு தேர்வுகள் மன அழுத்தத்தை உண்டாக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் முன்னேற்றத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இக்காலத்தில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் பெரிய அளவில் இழப்பை சந்திப்பீர்கள். ஆடம்பரத்தை தவிர்க்க வேண்டும். எதிலும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். வேலை தேடுபவர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்படலாம். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற அதிக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications