Latest Updates
-
சனிபகவான் திரிகிரக யோகத்தின் போது நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் -
கிட்னியை பாதுகாக்கும் சத்தான வாழைத்தண்டு தோசை ரெசிபி - செஞ்சு பாருங்க, ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது -
வரதட்சணை கொடுமை: திருமணமான 7 ஆண்டுகளில் நடக்கும் மரணங்கள்! உங்கள் மகளைக் காக்க இந்த சட்டங்கள் தெரியுமா? -
இந்தியா-லண்டன் வரை 11 நாடுகள் வழியாக சென்ற உலகின் நீண்ட பயணத்தின் டிக்கெட் கட்டணம் எவ்வளவு தெரியுமா? -
சுக்கிரன் ராகுவின் நட்சத்திரம் செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வரதட்சணை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கணுமா? புதிய சட்டங்கள் மற்றும் குடும்பத்தினர் செய்ய வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இதோ! -
மாவிளக்கு மாவு ரொம்ப மிச்சமாகிருச்சா? அதை வைச்சு இந்த மாதிரி பலகாரம் பண்ணுங்க - சூப்பரா இருக்கும் -
ஸ்ரீரங்கம் ஸ்பெஷல் அரைச்சுவிட்ட வத்தக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அமிர்தமா இருக்கும் -
வெயில் கொடுமையா? வீட்டை ஜில்லுனு வச்சுக்க இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், பணமும் தேடி வரும்! -
சாணக்கிய நீதி படி திருமணமான ஆண் பிற பெண்கள் மீது ஆசை கொள்வதற்கு இந்த 5 விஷயங்களில் ஒன்றுதான் காரணமாம்
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்?
Jupiter Transit 2026: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அடிக்கடி ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி நவகிரகங்களில் மிகவும் மங்களகரமான கிரகமும், தேவர்களின் குருவாகவும் கருதப்படுபவர் தான் குரு பகவான்.
இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் இருப்பார். தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி கடக ராசிக்குள் குரு பகவான் நுழைவதால் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது.

ஜோதிடத்தில் இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. அதுவும் இது பஞ்சமகாபுருஷ யோகங்களில் ஒன்றாகும். இந்த யோகமானது தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைக் கொண்டு வரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். முடிவெடுக்கும் திறன் மேம்படும். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவானால் உருவாகும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த யோகத்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திட்டங்கள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியடையும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். புதிய தொழிலை தொடங்கும் தைரியம் மனதில் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை காண்பீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மனதில் உள்ள அழுத்தம் நீங்கி, மனநிலை சந்தோஷமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். மொத்தத்தில் குருவின் அருளால் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பொறுமையுடனும், எதையும் புரிந்தும் செயல்பட்டால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்ளின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பு அதிகரிக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களை எதிரிகளை வென்று வீழ்த்துவார்கள். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டில் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வீர்கள். காதல் வாழ்க்கை வலுபெறும். தம்பதிகளிடையே பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



