Latest Updates
-
இந்த 4 அன்பான ராசிக்காரங்க எப்போதும் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுபவர்களாம் - உங்க ராசி என்ன? -
இன்னிக்கே உங்க பர்ஸில் ஒரு துண்டு சிவப்பு பேப்பரை வையுங்க.. அப்புறம் நடக்குற அதிசயத்தை பாருங்க.. -
நார்த் இந்தியன் ஸ்வீட் கார்ன் மசாலா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு பட்டாசா இருக்கும் -
திரிகோண வீட்டில் நிகழும் சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு பணப்பிரச்சனை அதிகரிக்கப்போகுது! உஷார்.. -
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: மே முதல் இந்த 3 ராசிக்கார்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Jupiter Transit In Cancer 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
அப்படி குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அந்த வகையில் தற்போது குரு பகவான் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் குரு பகவான் மே மாதம் 2 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இருப்பார்.

சந்திரனின் கடக ராசிக்குள் குரு பகவான் நுழைவதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சிலருக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சிலருக்கு வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். இப்போது கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் கௌரவமும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீரும். கடன தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகளும், செல்வமும் குவியும்.
மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காண்பார்கள். நிதி நிலைமை வலுவடையும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷம் பெருகும். நிதி நிலைமை வலுவடையும். திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். புதிதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


