Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
5 மாதங்களில் 2 முறை நடக்கும் குருப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது...
Double Jupiter Transit 2026: வேத ஜோதிடத்தில், தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான். இந்த குரு பகவான் ஞானம், நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, செல்வம் ஆகியவற்றைத் தரக்கூடியவராவார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். ஆனால் இந்த ஆண்டு குரு பகவான் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்.
அதுவும் 5 மாதங்களில் இருமுறை ராசியை மாற்றவுள்ளார். இப்படி குரு பகவான் குறுகிய காலத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுவது மிகவும் சிறப்பானது. இது தவிர ஜூன் மாதத்தில் குரு பகவான் இரண்டு முறை கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இப்படியான குருவின் நிலை மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாட்காட்டியின் படி, குரு பகவான் ஜூன் 02 ஆம் தேதி தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். அதன் பின் அக்டோபர் 31 ஆம் தேதி சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். குரு பகவானின் இந்த இரட்டை பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது 2026 ஆம் ஆண்டில் 5 மாதங்களில் 2 முறை ராசியை மாற்றும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
குரு பகவானின் இரட்டை பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இன்னும் சிறப்பான பலனைப் பெற வியாழக்கிழமைகளில் கோவிலுக்கு பூஜை பொருட்களை வாங்கி கொடுங்கள்.
மிதுனம்
குரு பகவானின் இரட்டை பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலனைப் பெற சிவப்பு பருப்பு அல்லது மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்யுங்கள்.
கடகம்
குரு பகவானின் இரட்டை பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும். எடுத்த வேலைகளில் வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தன்னம்பிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் மற்றும் நல்ல முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் தேடி வரும்.
தனுசு
குரு பகவானின் இரட்டை பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை செழிப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். செல்வம் பெருகும். இன்னும் சிறப்பான பலனைப் பெற வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




