Latest Updates
-
கிழக்கிந்திய கம்பெனி எப்படி 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளராக மாறியது தெரியுமா? -
வீட்டை குளிர்ச்சியாக வைக்க இந்த செடிகள் போதுமா? பணவரவை அள்ளித்தரும் வாஸ்து ரகசியம் இதோ! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
மசாலா கோதுமை தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்!
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது..
Guru Peyarchi 2026: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் கிரகங்களிலேயே மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் ஒரு ராசியில் 1 ஆண்டு காலம் பயணிப்பார். இப்படி 1 வருடம் ஒரு ராசியில் இருக்கும் போது, மற்ற கிரகங்களுடன் சேர்ந்து யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தற்போது குரு பகவான் புதனின் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 02 ஆம் தேதி குரு பகவான் தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியின் அதிபதி சந்திரன். மனதின் காரணியான சந்திரனின் ராசிக்கு குரு பகவான் செல்வது சற்று சிறப்பானது. ஜோதிடத்தின் படி, எப்போது ஒரு கிரகம் உச்ச வீட்டிற்குள் நுழைகிறதோ, அப்போது இருமடங்கு நன்மைகளை வழங்கும்.

அந்த வகையில் கடக ராசிக்கு குரு பகவான் செல்வதால், குரு பகவானால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சிலருக்கு மோசமாக இருக்கலாம். இப்போது 12 ஆண்டுகளுக்கு பின் கடக ராசிக்கு செல்லும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஜூன் மாதத்தில் நடக்கும் குரு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த குரு பெயர்ச்சிக்கு பின் முயற்சித்தால், நல்ல சம்பளத்தில் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
நிதி நிலைமை கணிசமாக உயரும். தன்னம்பிக்கை, தைரியம், வீரம் ஆகியவை அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். அதிர்ஷ்ட கதவு திறக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிறைய லாபத்தைப் பெறக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கடகம்
ஜூன் மாத குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர். முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. நிதி நிலையில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, கைக்கு வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு வலுபெறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
மிதுனம்
ஜூன் மாதத்தில் நடக்கும் குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறலாம்.
வணிகர்களுக்கு எதிர்காலத்தில் இரட்டிப்பு லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை சீராகும். நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
ஜூன் மாத குரு பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் கனவு இருந்தால், அது நிறைவேறும் வாய்ப்புள்ளது. உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசை நிறைவேறும். போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். நிதி நிலைமை மேம்படும். கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் பணமும், வெற்றியும் மலைப்போல குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

