Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Aadi Perukku 2026: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் அம்மனை வழிட ஏற்ற மாதமாகும். மேலும் மற்ற தமிழ் மாதங்களை விட இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதுவும் இந்த மாதத்தில் வரும் ஆடி 18 ஆம் நாள் மிகவும் விஷேசமானவை. இந்த தினத்தை ஆடிப்பெருக்கு என்றும் அழைப்பர். இந்நாளில் நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து மக்கள் வழிபாடு செய்வார்கள். மேலும் இந்நாள் பல மடங்கு செல்வத்தையும், புண்ணியத்தையும் தரும் நாளாகவும் கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட ஆடிப்பெருக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்நாளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பல்வேறு வழிபாடுகளை செய்வார்கள். முக்கியமாக இந்த நாளில் புதுமணப் பெண்கள் தாலி சரடு மாற்றுவார்கள். சுமங்கலிப் பெண்கள் தாலி பெருக்கி போடுவார்கள். இதனால் கணவரின் ஆயுள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இப்போது ஆடிப்பெருக்கு நாளில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக செய்ய வேண்டியவைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. ஆடிப்பெருக்கு நாளில் பொதுவாக செய்யக்கூடிய வழிபாடு என்றால், அது ஆற்றங்கரை அல்லது குளக்கரை போன்ற நீர் நிலைகளில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வெற்றிலை அல்லது வாழை இலையில் வைத்து, பூ, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நாவல் பழம், காப்பு அரிசி, மஞ்சள் பூசப்பட்ட கயிற்றினை வைத்து, வழிபாடு செய்து, பூஜைக்கு பின் அந்த மஞ்சள் கயிற்றினை அனைவரும் கைகளில் கட்டிக் கொள்வார்கள். இந்த வழிபாடு வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை உங்கள் வீட்டிற்கு அருகில்
2. ஆடிப்பெருக்கு நாளில் புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. முன்னோர்களுக்குரிய வழிபாடுகளை சரியாக செய்து வந்தால், முன்னோர்களின் ஆசியால் வீட்டில் மகிழ்ச்சி பெருகும் என்று கூறப்படுகிறது.
3. ஆடிப்பெருக்கு நாளில் திருமணமான பெண்கள் தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக ஒரு வருடத்தில் திருமணமான பெண்கள் இரண்டு நாட்களில் தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது மங்களகரமானதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நாள், மற்றொன்று ஆடிப்பெருக்கு நாள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிற்றை மாற்றிக் கொள்ள நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.20 வரை என்று தேசமங்கையர்கரசி அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.
4. பொதுவாக ஒரு நன்னாளில் தானம் செய்வது மிகவும் நல்லது. அதுவும் திருமணமான சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்கள பொருட்களை தானமாக வழங்குவது நல்லது. அதுமட்டுமின்றி அன்னதானம் மற்றும் ஏழை எளியோருக்கு வேண்டிய பொருட்களை தானமாக செய்வது அளவில்லாத புண்ணியத்தை சேர்க்கும்.
5. ஆடிப்பெருக்கு நாளில் எது நமக்கு குறைவில்லாமல் பெருகி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த பொருட்களை வாங்கினால் அந்த பொருள் பெருகும் என்பது நம்பிக்கை. முக்கியமாக மங்களகரமான பொருட்களான மஞ்சள், உப்பு ஆகிய இரண்டையும் வாங்குவது மிகவும் நல்லது. இதன் மூலமும் செல்வம் பெருகுவதாக நம்பப்படுகிறது.
6. ஆடிப்பெருக்கு நாளில் குபேர பகவானுக்கு நாணயங்களால் குபேர பூஜை செய்து வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இதனால் குபேரனின் அருளால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
