ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!

Rahu In Avittam Nakshatra: ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக தெரியும். தற்போது ராகு கும்ப ராசியிலும், அவிட்டம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரமானது மங்களகரமானதாக கருதப்படுவதோடு, இது செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது.

Rahu In Avittam Nakshatra These Zodiac Signs Will Be Lucky Till April 2027

இந்த நட்சத்திரத்தில் ராகு பயணிப்பது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியைத் தரப்போகிறது. அதுவும் ராகு இந்த நட்சத்திரத்தில் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி வரை இருப்பார். இதனால் இக்காலகட்டத்தில் சில ராசிக்காரர்கள் நல்ல வளர்ச்சியை காண்பதோடு, நிதி நிலையில் நல்ல உயர்வையும் காண்பார்கள். அதுமட்டுமின்றி ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காணவுள்ளனர். இப்போது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஏப்ரல் 2027 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்

அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி

அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.

கும்பம்

அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள். உயர் அதிகாரிகள் வழங்கும் புதிய பொறுப்புகள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, September 15, 2026, 23:40 [IST]
Desktop Bottom Promotion