Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷலா கஷ்டப்பட்டு மாவு அரைக்காம இப்படி பட்டர் முறுக்கு செய்யுங்க.. 1 மாசம் வரை வெச்சு சாப்பிடலாம்! -
Hair Care: தலைக்கு எண்ணெய் வைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா முடி வீணாகிரும் -
முகத்தில் கரும்புள்ளிகள் அதிகமாக இருக்கிறதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
நியூமராலஜி படி இந்த தேதியில் பிறந்தவர்கள் கேதுவின் ஆசியால் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க பிறந்த தேதி என்ன? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நவம்பர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சாறு பிழிந்த எலுமிச்சை தோலை வீணாக்காதீங்க - இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க - ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பருப்பை கடையாம, ஒருவாட்டி ஹோட்டல் ஸ்டைல் பருப்பு கடையல் செய்யுங்க.. -
டாக்டர்கள் ஆப்ரேஷன் செய்யும் போது ஏன் நீலம் அல்லது பச்சை நிற உடை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? -
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும்
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் பிறந்த ராசி அவர்களின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள உதவுகிறது. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களும் ஒருவிதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள். குறிப்பாகப் பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் மற்றும் உறவுகளைக் கையாளும் விதம் மிகவும் வித்தியாமானதாக இருக்கும்.

சில பெண்கள் மென்மையானவர்களாகவும், அக்கறையானவர்களாகவும் இருப்பார்கள், ஆனால் சில ராசிகளில் பிறந்த பெண்கள் குறிப்பாக ஆண்களிடம், அதிக உறுதியுடனும், கடுமையாகவும் நடந்துகொள்ளக்கூடும். அவர்களைப் பார்த்தாலே ஆண்கள் பயப்படும் அளவிற்கு நடந்து கொள்வார்கள். அவர்கள் எந்தெந்த ராசி பெண்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிப் பெண்கள், போர் மற்றும் செயலின் கிரகமான செவ்வாயால் ஆளப்படுகிறார்கள். இந்த நெருப்பு ராசி பெண்கள், அதன் துணிச்சல், தைரியம் மற்றும் உறுதியான தன்மைக்காக அறியப்படுகறார்கள். மேஷ ராசிப் பெண்கள் இயல்பாகவே சுதந்திரமானவர்கள் மற்றும் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசத் தயங்காதவர்கள். ஆண்களிடம் பழகும்போது, அவர்கள் மரியாதையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பதால், கடுமையானவர்களாகத் தோன்றலாம். மேஷ ராசிப் பெண்கள் பலவீனத்தையோ அல்லது தயக்கத்தையோ விரும்புவதில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களையோ, விமர்சனங்களையோ பூசி மெழுக மாட்டார்கள். அவர்களின் கடினமான வெளித்தோற்றம், வலிமையின் அடையாளமாகவும், பின்பற்றுவதை விட வழிநடத்த வேண்டும் என்ற விருப்பத்தின் அடையாளமாகவும் இருக்கிறது.
மகரம்
சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிப் பெண்கள், தங்கள் ஒழுக்கம் மற்றும் எதார்த்த நடைமுறையாக அறியப்படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் ஆண்கள் உட்பட தங்களைச் சுற்றியுள்ள அனைவர்களிடமும் அதையே எதிர்பார்க்கிறார்கள். மகர ராசிப் பெண்கள் கண்டிப்பானவர்களாகவும் உறுதியானவர்களாகவும் இருப்பார்கள், அவர்கள் பெரும்பாலும் அர்த்தமற்ற பேச்சுகளுக்கோ அல்லது தேவையில்லாத விவாதங்களுக்கோ இடமளிக்க மாட்டார்கள். அவர்களின் கடினமான குணம் பெரும்பாலும் உயர்ந்த தரநிலைகள் மற்றும் வலுவான பொறுப்புணர்வில் வேரூன்றியுள்ளது. அவர்கள் ஆண்களை சிறந்தவர்களாக இருக்கத் தூண்டுகிறார்கள், ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது உணர்ச்சியற்றவர்களாகவோ அல்லது மன்னிக்காதவர்களாகவோ தோன்றலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிப் பெண்கள் புளூட்டோ மற்றும் செவ்வாய் கிரகங்களால் ஆளப்படுகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் தீவிரத்தன்மை மற்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளுக்காக அறியப்படுகிறார்கள். ஒரு விருச்சிக ராசிப் பெண் ஆண்களிடம் கடுமையாக நடந்துகொள்வது, அது அவர்களின் பாதுகாப்பு உணர்வு மற்றும் சந்தேக மனப்பான்மையிலிருந்து உருவாகிறது. அவர்கள் துரோகத்தையோ நேர்மையின்மையையோ சகித்துக்கொள்ள மாட்டார்கள், மேலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள். இந்தத் தீவிரத்தன்மை கடுமையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் அவர்களின் பலவீனத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசம் போல செயல்படுகிறது.
தனுசு
தனுசு ராசிப் பெண்கள், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை குறிக்கும் குருபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இவர்கள் தங்கள் நேர்மை மற்றும் வெளிப்படையான பேச்சுக்கு பெயர் பெற்றவர்கள். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது அவர்களின் நோக்கமல்ல என்றாலும், மென்மையான அணுகுமுறையை விரும்பும் ஆண்களுக்கு இவர்களின் அதிரடியான பேச்சு மிகவும் கடுமையாகத் தோன்றலாம். தனுசு ராசிப் பெண்கள் சுதந்திரத்தை பெரிதும் மதிக்கிறார்கள்; மற்றவர்களைத் தங்கள் விருப்பப்படி வளைக்க நினைப்பதையோ அல்லது கட்டுப்படுத்த முற்படுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. இவர்கள் விரைவாகச் சிந்தித்து வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள் என்பதால், ஏற்றுக்கொள்ள முடியாத எந்தவொரு செயலையும் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுவார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

