ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..

Posted By:

Lunch Box Special Coconut Rice Recipe In Tamil: காலையில் பசங்களுக்கு லன்ச் பாக்ஸிற்கு என்ன சமைத்து கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? நீங்கள் பெரும்பாலும் லன்ச் பாக்ஸிற்கு வெரைட்டி ரைஸ் தான் செய்து கொடுப்பீர்களா? அதுவும் எப்பவும் ஒரே மாதிரி புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம் என்று தான் செய்து கொடுப்பீர்களா?

Lunch Box Recipes How To Make Coconut Rice Thengai Sadam Recipe

உங்கள் பிள்ளைகளுக்கு தேங்காய் சாதம் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த தேங்காய் சாதத்தை ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்து கொடுங்கள். இப்படி தேங்காய் சாதம் செய்து கொடுக்கும் போது இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி இந்த சாதத்தை செய்து கொடுக்கவும் சொல்வார்கள். முக்கியமாக இந்த சாதம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த தேங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3 (விதைகளை நீக்கி உடைத்தது)
* இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 5-7 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வடித்த சாதம் - 1 கப்

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கப் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 கப் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 15, 2026, 22:24 [IST]
Desktop Bottom Promotion