Latest Updates
-
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க..
Mistakes After Eating In Tamil: உணவு தான் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற உட்கொள்ளும் 3 வேளை உணவுகளும், ஆரோக்கியமானதாகவும், சமச்சீரானதாகவும் இருக்க வேண்டியது அவசியம். நல்ல ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உட்கொள்ளும் போது, உடலுறுப்புக்களின் செயல்பாடு, இரத்த ஓட்டம் போன்றவை சீராக இருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிப்பதில்லை, உணவு உண்ட பின் மேற்கொள்ளும் செயல்களும் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதுவும் உணவு உண்ட பின் ஒருசில செயல்களை மேற்கொண்டால், அது பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது தெரியாமல் நிறைய பேர் ஆரோக்கியமான பழக்கங்கள் என்று கருதி உணவுக்கு பின் ஒருசில பழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். சொல்லப்போனால் இப்படியான பழக்கங்கள் செரிமானத்தை சீராக்குவதற்கு பதிலாக, ஆரோக்கியத்தை தான் சீர்குலைக்கும். இப்போது உணவு உண்ட உடனே செய்யக்கூடாத 5 விஷயங்கள் குறித்து காண்போம்.
1. உணவு உண்டதும் காபி/டீ குடிப்பது
நிறைய பேர் உணவு உண்ட பின் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் சாப்பிட்டதும் காபி/டீயைக் குடித்தால், அது செரிமானத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இவற்றில் உள்ள டானின்கள் இரும்புச்சத்து உறிஞ்சுவதைக் குறைக்கின்றன. அதுமட்டுமின்றி, இப்படி காபி/டீயை குடிக்கும் போது, அது அமிலத்தன்மையை அதிகரிக்கும். இதன் விளைவாக வயிற்று உப்புசத்தை உண்டாக்குவதோடு, செரிமான செயல்பாட்டைக் குறைக்கலாம். எனவே உணவுக்கு பின் காபி/டீ குடிக்க நினைத்தால், குறைந்தது 1 மணிநேரம் கழித்து அருந்துங்கள்.
2. சாப்பிட்டதும் பழங்களை உண்பது
உணவு உண்ட பின் சிலருக்கு பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். என்ன தான் பழங்கள் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருந்தாலும், அவற்றை உணவு உண்ட பின் சாப்பிடுவது நல்லதல்ல. இல்லாவிட்டால் அது நொதித்தலை ஏற்படுத்தி, வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை போன்றவற்றிற்கு வழிவகுக்கும். உங்களுக்கு பழங்கள் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால், உணவுக்குக் குறைந்தது அரை மணி நேரத்திற்கு முன்போ அல்லது இரண்டு மணி நேரத்திற்குப் பிறகோ, வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிடுவதே சிறந்தது.
3. சாப்பிட்ட உடனே தூங்குவது அல்லது படுப்பது
உணவு உண்ட உடனேயே படுத்தால், வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் உணவுக்குழாய் வழியாக மேலே ஏறக்கூடும். இதன் விளைவாக நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றால் சிரமப்படுவற்கான வாய்ப்புள்ளது. எப்போதும் தூங்குவதாக இருந்தால், உணவு உண்ட பின் 2 மணிநேரம் கழித்து தூங்க வேண்டும்.
4. அதிகளவு நீரை அருந்துவது
தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது தான். ஆனால் அந்த நீரை எப்போதெல்லாம் குடிக்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். உணவு உண்டதுமே அதிகளவு நீரை குடித்தால், அது வயிற்று அமிலங்களையும் செரிமான நொதிகளையும் நீர்த்துப் போக செய்து, உணவை செரிக்கும் செயல்முறையை மெதுவாக்கும். இதன் விளைவாக வயிறு கனமாகவும், செரிமான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் தண்ணீர் குடிக்க நினைத்தால், 30 நிமிடம் கழித்து குடிப்பது நல்லது.
5. உணவு உண்டதும் உடற்பயிற்சி செய்வது
உடற்பயிற்சி செய்வது நல்லது என்றாலும், அந்த உடற்பயிற்சியை செய்வதற்கும் நேரம் காலம் உண்டு. முக்கியமாக உடற்பயிற்சியை உணவு உண்ட பின் செய்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக தீவிரமான உடற்பயிற்சிகளை உணவுக்கு பின் செய்தால், அது செரிமான மண்டலத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கி, தசைப்பிடிப்பு அல்லது குமட்டலுக்கு வழிவகுக்கும். வேண்டுமானால் உணவு உண்ட பின் மெதுவாக நடக்கலாமே தவிர, தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வதாக இருந்தால், குறைந்து 1 மணிநேரம் கழித்து செய்யலாம்.
எனவே நண்பர்களே! உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்வது மட்டுமின்றி, உணவுக்கு பிறகான உங்களின் பழக்கங்களிலும் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
