Latest Updates
-
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
Lakshmi Narayan Rajyog On 27 September 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராசி மாற்றங்கள் மற்றும் அவற்றின் சேர்க்கையால் உருவாகும் யோகங்கள் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அற்புதமான கிரக சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரனும், கிரகங்களின் இளவரசனாகவும், புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாகவும் கருதப்படும் புதனும் ஒன்றிணையவுள்ளனர். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்த சேர்க்கையானது சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசியில் நிகழவுள்ளது.

வேத நாட்காட்டியின் படி, சுக்கிரன் செப்டம்பர் 27 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அப்படி நுழையும் போது அந்த ராசியில் ஏற்கனவே புதன் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகத்தினால் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.
இப்படிப்பட்ட ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செப்டம்பர் இறுதியில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். அதுவும் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பங்குச் சந்தை, ஊடகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பணப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்தாலும், நிதி நிலை சிறப்பாகவே இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஊடகம், மார்கெட்டிங் மற்றும் கலைத் துறையில் இருப்பவர்கள், தங்கள் வேலையில் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
