தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ?

நம் உலகம் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் அளவிற்கு தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வந்தாலும் பூமியிலேயே நம்மால் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத சில தனித்துவமான நாடுகள் உள்ளன. ஒட்டுமொத்த உலகத்திடமிருந்தும் விலகி தனியாக வாழும் நாடுகளில் முக்கியமானது வட கொரியா. வட கொரியா என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அங்குள்ள கடுமையான விதிமுறைகள்தான்.

Weirdest Rules North Korean People Should Follow

சாதாரண மக்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் இங்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அங்கு மக்கள் வாழ்வதையே கடினமாக மாற்றியுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதனால்தான் வட கொரியா 'பூலோக நரகம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த பதிவில் வட கொரியாவில் பொதுமக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

நான்கு டிவி சேனல்கள் மட்டுமே உள்ளது

நம் வீட்டில் சாதாரணமாகவே நூற்றுக்கணக்கான டிவி சேனல்கள் இருக்கும், அதுமட்டுமின்றி பல OTT தளங்கள் உள்ளது. ஆனால் வட கொரியாவில் நிலை முற்றிலும் வேறுமாதிரி உள்ளது. வடகொரியாவின் விதிகளின்படி, அந்நாட்டு மக்களுக்கு நான்கு சேனல்கள் மட்டுமே உள்ளன, வேறு வழியில்லாததால் அவர்கள் அவற்றைத்தான் பார்க்க வேண்டியுள்ளது. அந்தச் சேனல்களில் ஒளிபரப்பப்படும் அனைத்தும் அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்படுகின்றன.

மூன்று தலைமுறை தண்டனை

வட கொரியாவில், ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்தால், அதற்காக அந்த தனிப்பட்ட நபர் மட்டுமல்லாமல் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் தண்டிக்கப்படும். அவர்களின் மூன்று தலைமுறைகள் - அதாவது தாத்தா-பாட்டி, பெற்றோர் மற்றும் குழந்தைகள் - அந்தத் தண்டனையின் முழுச் சுமையையும் சுமக்க வேண்டியிருக்கும்.

அரசாங்கம் அங்கீகரித்த ஹேர்கட்டை மட்டுமே செய்ய வேண்டும்

வட கொரிய அரசாங்கம் 28 அதிகாரப்பூர்வ சிகை அலங்காரங்களை அங்கீகரித்துள்ளது. மற்ற ஹேர் ஸ்டைல்கள் தடை செய்யப்பட்டுள்ளதால், அந்நாட்டின் அனைத்து ஆண்களும் பெண்களும் இந்த அங்கீகரிக்கப்பட்ட ஹேர் ஸ்டைல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும். 'ஸ்பைக்' எனப்படும் முட்கள் போன்ற சிகை அலங்காரம் குறிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், இது அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சி மனப்பான்மையைக் குறிப்பதாக அரசாங்கம் கருதுகிறது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் 2013-ல் இந்த விதிமுறையைக் கொண்டுவந்தார். ஆனால் இந்த 28 வகையில் அவரது சிகை அலங்காரம் இல்லை, ஏனெனில் அதைத் தனித்துவமாக வைத்துக்கொள்ள அவர் விரும்பினார். அவருடைய ஸ்டைலில் சிகை அலங்காரம் வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தனிப்பட்ட கூடைப்பந்து விதிகள்

வட கொரியா தனித்துவமான பேஸ்கெட் பால் விதிமுறைகளைக் கொண்டுள்ளது. வட கொரியாவில், 'ஸ்லாம் டங்க்' (slam dunk) முறைக்கு இரண்டு புள்ளிகளுக்குப் பதிலாக மூன்று புள்ளிகள் வழங்கப்படுகின்றன; ஆட்டத்தின் கடைசி மூன்று நிமிடங்களில் அடிக்கப்படும் 'ஃபீல்ட் கோல்'களுக்கு (field goals) எட்டு புள்ளிகள் கிடைக்கின்றன. மேலும், மூன்று முறை பந்தை எறிந்து கோல் அடிக்கத் தவறினால், ஒரு புள்ளி கழிக்கப்படும்.

தலைநகரில் வசிக்க அரசின் அனுமதி தேவை

நம் தலைநகரான டெல்லியில் எளிய மக்கள் வசிப்பது போல அனைவராலும் வட கொரியாவின் தலைநகரில் வசிக்க முடியாது. பியோங்யாங்கில் மிகவும் வெற்றிகரமான, செல்வந்த மற்றும் அதிகாரம் மிக்கவர்கள் மட்டுமே வசிக்க வேண்டும் என்று கிம் ஜாங்-உன் விரும்புகிறார். எனவே, தலைநகரில் வசிப்பதற்கு அரசின் தெளிவான அனுமதி தேவை.

பெற்றோர்கள் பள்ளிக்கு மேஜைகள், நாற்காலிகள் மற்றும் கட்டிடப் பொருட்களை வழங்க வேண்டும்

வட கொரியாவில் பள்ளிக்குச் செல்லும் ஒரு மாணவர் தனது மேஜை மற்றும் நாற்காலிக்கான செலவைச் சொந்தமாக ஏற்க வேண்டும். பள்ளிக் கட்டணத்தில் இதற்கான செலவு அடங்காததால், பெற்றோர்கள் இதற்கெனத் தனியாகப் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது.

பைபிள் வைத்திருப்பது சட்டவிரோதமானது

வட கொரியாவில் பைபிள் மேற்கத்திய கலாச்சாரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது; அது மக்களைத் தன்வசப்படுத்தி மதம் மாறத் தூண்டக்கூடும் என்பதால், அந்நாட்டில் அதை வைத்திருக்க அனுமதி இல்லை. ஒருமுறை, பைபிளை விநியோகித்துக்கொண்டிருந்த கிறிஸ்தவப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.

கார் ஓட்ட அனுமதியில்லை

அரசு அதிகாரிகள் அதுவும் ஆண்களுக்கு மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதி உண்டு. போக்குவரத்து அதிகாரிகளாகப் பணிபுரிந்தாலும் கூட, பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்படுவதில்லை. அரசின் கட்டுப்பாடுகளின்படி, நூறு பேரில் ஒருவருக்கு மட்டுமே கார் வைத்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Story first published: Monday, September 14, 2026, 17:08 [IST]
Desktop Bottom Promotion