Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!

Ganesh Chaturthi 2026: இந்து மதத்தில் விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான பண்டிகையாகும். முழுமுதற் கடவுளான விநாயகர் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் பிறந்தார். அந்த வகையில் இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் தேதி வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி ஒரு நாள் மட்டுமின்றி, 10 நாட்கள் வரை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Ganesh Chaturthi 2026 List Of Lucky Zodiac Signs In Tamil

இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி சிறப்பானது. ஏனெனில் இந்நாளில் பல சுப யோகங்கள் உருவாகின்றன. அதில் பத்ர ராஜயோகம், மாளவ்ய ராஜயோகம், ஹன்ஸ் ராஜயோகம் மற்றும் ரவி யோகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதுமட்டுமின்றி, இந்நாளில் புதன் மற்றும் யுரேனஸ் கிரகங்களின் நிலைகளால் நவபஞ்சம ராஜயோகமும் உருவாகிறது.

இப்படி பல ராஜயோகங்கள் விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாவதால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கம் ஏதாவது ஒரு வகையில் காணப்படும். குறிப்பாக சில ராசிக்கார்கள் நல்ல அதிர்ஷ்டத்துடன், விநாயகரின் சிறப்பு ஆசிகளையும் பெறவுள்ளனர். இப்போது விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமாக இருக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கக்கூடும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை வலுவடையும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்சம யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். அதுவும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி

விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நற்பலன்களை வழங்கும். முக்கியமாக தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும். கடன் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். புதிய வருமான வழிகள் உருவாகும். நுண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். விநாயகரின் சிறப்பு அருளைப் பெறுவீர்டகள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 14, 2026, 10:22 [IST]
Desktop Bottom Promotion