பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க..

Posted By:

Pori Dosa Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் தோசை சுட மாவு இல்லையா? என்ன டிபன் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் உள்ளோர் காலையில் பெரும்பாலும் தோசையைத் தான் கேட்பார்களா? உங்கள் வீட்டில் பூஜைக்கு வாங்கிய பொரி உள்ளதா? அப்படியானால் அந்த பொடியுடன், ரவையை சேர்த்து கலந்து, அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கலந்து, தோசையாக சுட்டு சாப்பிடுங்கள். இந்த பொரி தோசை வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசைக்கு தக்காளி சட்னி அருமையான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

Pori Dosa How To Make Pori Dosa Recipe

உங்களுக்கு இந்த பொரி தோசையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொரி தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பொரி - 3 கப்
* ரவை - 1 கப்
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இட்லி பொடி - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் 3 கப் பொரியை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 கப் ரவையை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1/2 கப் தயிரை சேர்த்து, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை எடுத்துக் கொண்டு, ஜாரில் 1/2 கப் நீரை ஊற்றி அலசி அத்துடன் சேர்த்து கலந்து, மூடி வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* மாவு நன்கு ஊறிய பின்னர், அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி, மேலே சிறிது இட்லி பொடியைத் தூவி, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான பொரி தோசை தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, October 23, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion