இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்!

Heart Healthy Drinks In Tamil: நமது உடலிலேயே சற்றும் ஓய்வெடுக்காமல் நாள் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு தான் இதயம். இப்படிப்பட்ட இதயத்தில் பிரச்சனையை சந்திக்கும் வரை யாரும் அதைப் பற்றி கவலைப்படமாட்டோம். இதயத்தில் எப்போது பிரச்சனை ஏற்படுமானால், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாயில் ப்ளேக்குகள் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும் போது இதய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

Top 4 Heart-Healing Drinks that Keep Arteries Healthy And Clean

பொதுவாக தமனிகளில் படியும் ப்ளேக்குகள் ஆரம்பத்தில் எவ்வித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமல் மெதுவாக உருவாகலாம். ஆனால் அது அப்படியே நீடிக்கும் போது, இதயத்தில் எதிர்பாராத அளவில் சேதத்தை ஏற்படுத்திவிடும். இதைத் தவிர்க்க வேண்டுமானால், இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் படியாமல், சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ள ப்ளேக்குகளை மாயாஜாலமாக அகற்ற எந்த ஒரு பானமும் இல்லை என்றாலும், குறிப்பிட்ட சில பானங்கள் இரத்த குழாய்களில் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை ஆதரிக்கவும், அழற்சியைக் குறைக்கவும் மற்றும் இரத்த குழாய்களை பாதுகாக்கவும் உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. அந்த பானங்களை அடிக்கடி குடித்து வந்தால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

தமனிகளின் ஆரோக்கியம் ஏன் முக்கியம்?

இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களை தான் தமனிகள் என்று அழைப்பர். இந்த தமனிகள் தான் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கின்றன. காலப்போக்கில், கொழுப்பு, கால்சியம் மற்றும் பிற பொருட்களால் செய்யப்பட்ட பிளேக் படிப்படியாக இந்த தமனிகளை சுருங்கச் செய்து, பெருந்தமனி தடிப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த பெருந்தமனி தடிப்பு உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இப்படி உருவாகும் ப்ளேக்கை ஒரே இரவில் அகற்ற முடியாவிட்டாலும், குறிப்பிட்ட சில பானங்களை குடித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டு வந்தால், பெருந்தமனி தடிப்பின் வளர்ச்சியைக் குறைக்க உதவி புரிந்து, தமனிகளின் செயல்பாட்டையும் ஆதரிக்கும். இப்போது இதய தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவி புரியும் சில பானங்களைக் காண்போம்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை இரத்த நாளங்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவும். ஆய்வுகளிலும் இந்த சேர்மங்கள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், எண்டோதீலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவுவதாக தெரிவிக்கின்றன. அதுவும் சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீயை பிரஷ்ஷாக தயாரித்து குடிக்கும் போது, ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களை மேக்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியம் இன்னும் நன்றாக இருக்கும்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸில் புனிகலகின்கள் (punicalagins) மற்றும் அந்தோசயனின் (anthocyanins) போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை தமனிகளின் சுவற்றினை பாதுகாக்கவும், அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே அடிக்கடி மாதுளை ஜூஸ் வாங்கி குடியுங்கள்.

பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் ஜூஸில் நைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன. இவை உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதற்கு இந்த பானத்தை சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். இப்படி குடிக்கும் போது, ஆரோக்கியமான இரத்த ஓட்டத்திற்கும் இரத்த அழுத்தத்தைப் பராமரிக்கவும் உதவும்.

மஞ்சள் பால்

நாள்பட்ட அழற்சி தான் இதய நோயுடன் தொடர்புடைய காரணிகளில் ஒன்றாகும். மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகளுக்காக ஆராயப்பட்ட ஒரு இயற்கையான சேர்மமாகும். இந்த மஞ்சளை பாலுடன் சேர்த்து, அத்துடன் 1 சிட்டிகை மிளகுத் தூளையும் சேர்த்து கலந்து குடிக்கும் போது, அதில் உள்ள குர்குமின் உடலால் திறம்பட உறிஞ்சப்படும். எனவே இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த குழாய்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், மஞ்சள் பாலை தினமும் இரவு வேளையில் குடித்து வாருங்கள்.

தமனிகளில் உள்ள அடைப்புகளை முழுமையாக அகற்றக்கூடிய பானம் எதுவும் இல்லை என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சேர்த்து க்ரீன் டீ, மாதுளை ஜூஸ் பீட்ரூட் ஜூஸ், மஞ்சள் பால் போன்ற பானங்களை குடித்து வரும் போது, அது இரத்த குழாய்களில் உள்ள அழற்சியைக் குறைத்து, இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 23, 2026, 13:17 [IST]
Desktop Bottom Promotion