Latest Updates
-
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும்
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்!
Venus Moon Conjunction 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 06 ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் வக்ர நிலையில் நுழைகிறார். அப்போது அந்த கன்னி ராசியில் சந்திரன் இருப்பதால், கன்னி ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இவ்விரு கிரகங்களின் சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களையும், தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது கன்னி ராசியில் நிகழும் சுக்கிரன்-சந்திரன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். நிதி நிலை படிப்படியாக மேம்படும். திடீரென்று நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களின் இலக்குகளை அடைவீர்கள். கடினமான சூழ்நிலைகளை எளிதில் கையாள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறையும். நிதி நிலைமை வலுவடையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் குறையும். வசதிகள் அதிகரிக்கும். இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
