அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்..

Venus Rise In Libra On 29 October 2026: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் மாதம் ஒருமுறை தனது நிலையை மாற்றக்கூடியவர். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

Venus Rise In Libra On 29 October 2026 These Zodiac Signs Money Problem Will Be Solved

அந்த வகையில் தற்போது சுக்கிரன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் அக்டோபர் 29 ஆம் தேதி துலாம் ராசியில் உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால் இதுவரை சுக்கிரனின் நிலையால் தொழில் மற்றும் நிதி பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், நல்ல நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர். இப்போது துலாம் ராசியில் உதயமாகும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். உங்களின் செயல்திறன் உயர்அதிகாரிகளால் பாராட்டப்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பண பரிவர்த்தனைகளால் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். முக்கியமாக இதுவரை பண பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அப்பிரச்சனை முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இக்காலத்தில் செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். மேலும் முதலீடுகளை செய்யும் முன் யோசித்து செய்ய வேண்டும்.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதேப் போல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். சிந்தித்து செய்யும் நிதி முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 22, 2026, 23:35 [IST]
Desktop Bottom Promotion