Latest Updates
-
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்..
Vastu Tips: தற்போது ஃபிரிட்ஜ் என்பது உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் அத்தியாவசியமான மின்சாதனமாக உள்ளது. மேலும் அலங்காரத்திற்காக ஃபிரிட்ஜ்ஜின் மேற்பகுதியில் பல்வேறு பொருட்களை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். என்ன தான் ஃப்ரிட்ஜ் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க உதவினாலும், பல வீடுகளில் இந்த ஃப்ரிட்ஜ்ஜின் மேற்பரப்பு ஒரு டேபிள் போன்று பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் பொருட்களை வைக்கும் இடம் குடும்பத்தின் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், ஃபிரிட்ஜின் மேற்பகுதியில் சில பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அப்படி வைக்கும் போது அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, நிதி இழப்பையும், வாஸ்து தோஷத்தையும் உண்டாக்கும். இப்போது வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ் மேல் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது குறித்து காண்போம்.
பணம் அல்லது முக்கியமான பில்கள்
நிறைய வீடுகளில் ஃப்ரிட்ஜ்ஜின் மேல் பணம், பில்கள் அல்லது முக்கியமான ஆவணங்களை வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் நிதி ரீதியாக இப்படி செய்வது நல்லதல்ல. வாஸ்துப்படி, இப்படியான செயல் வீட்டில் செல்வம் சேர்வதை தடுக்கும் மற்றும் வீட்டில் தேவையற்ற செலவுகளை அதிகரிக்கும். எனவே இதுவரை நீங்கள் பணத்தை ஃப்ரிட்ஜ்ஜின் மேல் வைத்து வந்தால், உடனே அதை தவிர்த்திடுங்கள்.
உடைந்த பொருட்கள்
ப்ரிட்ஜ்ஜின் மேல் உடைந்த பொருட்களை வைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இப்படியான பொருட்கள் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். எனவே வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் ஃப்ரிட்ஜ் மேல் வைக்காதீர்கள். இல்லையெனில் அது நிதி இழப்புக்களை ஏற்படுத்தும்.
மருந்துகள்
நிறைய பேர் மருந்துகளை ஃப்ரிட்ஜ் மேல் வைத்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் வாஸ்துப்படி இப்படி செய்வது நல்லதல்ல. ஒருவேளை அப்படி வைத்து உட்கொண்டால், அது வீட்டில் நோய்களையும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும் என்றும், அதன் விளைவாக ஒருவரின் நிதி நிலைத்தன்மை பாதிக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. எனவே எப்போதும் மருந்துகளை ஃப்ரிட்ஜ் மேல் வைக்காமல் தனித்துவமான இடத்தில் வையுங்கள்.
கனமான பொருட்கள்
ஃப்ரிட்ஜ்ஜின் மேல் கனமான பொருட்களை வைப்பதை அறவை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அது வீட்டில் ஆற்றல் ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும். இதன் விளைவாக வீட்டில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
