Latest Updates
-
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் மாத தொடக்கத்தில் ஒன்றிணையும் சுக்கிரன்-சந்திரன்: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சரவணபவன் காலிஃபிளவர் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களுக்கு சிறந்த ரோல்மாடலாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா?
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்!
Jupiter Transit 2026: ஜோதிடத்தில் குரு பகவான் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார். தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் அதிர்ஷ்டம், அறிவு, செல்வம், குழந்தைகள், வளர்ச்சி, மகிழ்ச்சி, திருமணம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் ஒரு ராசியின் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.

ஆனால் தற்போது குரு பகவான் அதிசார நிலையில் இருப்பதால், அடிக்கடி ராசியை மாற்றுகிறார். இந்த அதிசார நிலை காரணமாக குரு பகவான் ஆண்டுக்கு இரண்டு முதல் மூன்று முறை ராசியை மாற்றுவார். இப்படி குரு பகவான் குறுகிய காலத்தில் ராசியை மாற்றும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அந்த வகையில் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி அதிசாரமாக ராசியை மாற்றுகிறார். அதே வேளையில் நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார்.
தற்போது குரு பகவான் கடக ராசியிலும், ஆயில்யம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்கும், மகம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார். இப்படி ஒரே நாளில் குரு பகவான் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதால், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகிறது. இப்போது ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் தேடி வரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குருவின் அருளால் நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தைக் காண்பார்கள். சட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும். குருவின் அருளால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழிலில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் நீங்கும். வேலையில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அவர்கள் மூலம் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலையில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



