Latest Updates
-
நடிகை சமந்தாவிற்கு பிடித்த பிஸிபேலேபாத் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாய்களை சுத்தமா வெச்சுக்கணுமா? அப்ப இந்த பானங்களை குடிங்க போதும்! -
ஹரா பரா புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா? -
ஒரே நாளில் நடக்கும் குருபகவானின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
பூஜைக்கு வாங்குன பொரி நமத்துப் போச்சா? அப்ப தூக்கி போடாம இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. -
அக்டோபர் 23, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
அக்டோபர் இறுதியில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீர்ந்து, வங்கி இருப்பு அதிகரிக்கும்.. -
Vastu Tips: வாஸ்துப்படி ஃப்ரிட்ஜ் மேல் இந்த பொருட்களை வெக்காதீங்க.. இல்லன்னா வீட்டுல பண இழப்பு அதிகரிக்கும்.. -
அக்டோபர் 24-ல் புதன் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 4 ராசிகளின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம்
பாம்பு இரத்தத்தை குடிக்கும் பழக்கமுள்ள நாடுகள் - இந்த வினோத பழக்கத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?
'பாம்பென்றால் படையும் நடுங்கும்' என்று கூறுவார்கள். அதற்கு காரணம் எவ்வளவு பெரிய வீரனையும் ஒரு துளி பாம்பின் விஷம் வீழ்த்திவிடும். அதனால்தான் பாம்பு பூமியின் மிகவும் ஆபத்தான உயிரினங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பாம்பின் விஷம் ஆபத்தானதாக இருக்கும் போது சில நாடுகளில் மக்கள் பாம்பின் இரத்தத்தை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இத்தகைய வழக்கத்திற்குப் பின்னால் உள்ள கலாச்சார மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் என்ன, இந்த வழக்கம் எந்தெந்த நாடுகளில் காணப்படுகிறது, மேலும் பாம்பின் இரத்தத்தை பச்சையாக உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்தெந்த நாடுகளில் மக்கள் பாம்பு இரத்தத்தை குடிக்கிறார்கள்?
சீனா, வியட்நாம் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் மக்கள் பாம்பின் இறைச்சி மற்றும் இரத்தத்தால் தயாரிக்கப்பட்ட பானங்களை மக்கள் அருந்துகின்றனர். உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பாம்பின் இரத்தத்தை அரிசி வைனுடன் கலந்து 'பாம்பு மது' தயாரிக்கிறார்கள். இந்த பாரம்பரிய பானங்கள் இந்தோனேசியாவின் சில பகுதிகளிலும் நுகரப்படுகிறது. பாம்பின் இரத்தத்தைக் குடிப்பது ஆற்றலை அதிகரிப்பதாகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால், இந்த கூற்றுகளுக்கு வலுவான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு பானம் பல நூற்றாண்டுகளாக குடிக்கப்படுவதாலேயே மட்டும் அது ஆரோக்கியமாக மாறிவிடாது.
பாம்பு விஷம் எப்படி மனிதர்களை பாதிக்கிறது?
பாம்பின் இரத்ததிற்கும், அதன் விஷத்திற்கும் சம்பந்தம் இல்லை. பாம்பு தனது விஷச் சுரப்பிகளில் விஷத்தை உற்பத்தி செய்கிறது. ஒருவரை கடிக்கும் போது, தனது பற்கள் வழியாக விஷத்தை அது உள்செலுத்துகிறது. இந்த விஷம் மனித இரத்தத்திலோ அல்லது திசுக்களிலோ கலக்கும்போது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. ஆனால், பாம்பின் இரத்தத்தைக் குடிப்பதால் எப்போதும் விஷத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை.
பாம்பின் இரத்தத்தில் விஷம் இருக்குமா?
பாம்பின் இரத்தத்தில் இயல்பாகவே விஷம் இருப்பதில்லை. ஒருவேளை அதில் சிறிதளவு விஷம் கலந்திருந்தாலும், அதன் பாதிப்பு என்பது விஷத்தின் அளவு, அது உடலுக்குள் செல்லும் விதம் மற்றும் பாம்பு கடியால் பாதிக்கப்படுபவரின் உடல்நிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும். பாம்பின் இரத்தத்தைக் குடித்தவுடன் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயம் இது பாதுகாப்பான பழக்கமல்ல.
வயிற்றில் உள்ள அமிலங்கள் பாம்பு விஷத்தை அழிக்குமா?
பாம்பு விஷத்தில் புரதங்களும், நொதிகளும் உள்ளன. நமது வயிறு, உணவுப் புரதங்களைச் சிதைக்க ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் செரிமான நொதிகளைப் பயன்படுத்துகிறது. இந்த செயல்முறை, சில விஷங்கள் வயிற்றுக்குள் நுழையும்போது அவற்றின் தாக்கத்தைக் குறைக்கக்கூடும். ஆனால், வயிற்று அமிலங்கள் பாம்பு விஷத்தை முழுமையாக அழிக்கும் என்று கூறிவிட முடியாது. வயிற்றில் உள்ள அமிலங்கள் பாம்பு இரத்தத்தைக் குடிப்பதைப் பாதுகாப்பானதாக ஆக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் தவறாகும்.
இரத்தத்திற்கும் விஷத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பாம்பின் இரத்தம், அது உயிருடன் இருப்பதற்காக உடல் முழுவதும் சுற்றுகிறது. ஆனால் பாம்பின் விஷம் என்பது, பாம்பு இரையை வேட்டையாடவும் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் உதவும் ஒரு சிறப்புப் பொருளாகும். இந்த இரண்டு திரவங்களும் முற்றிலும் மாறுபட்ட பணிகளைச் செய்கின்றன. ஆனால், மக்கள் பாம்பைக் கொல்லும்போதோ அல்லது அதன் திரவங்களை எடுக்கும்போதோ, அதன் சுரப்பிகளிலிருந்து வரும் விஷம் இரத்தத்துடன் எளிதில் கலக்கக்கூடும். பதப்படுத்தப்படாத பாம்பு இரத்தத்தில் அபாயகரமான பாக்டீரியாக்களும் நோய்க்கிருமிகளும் உள்ளன. நீங்கள் பதப்படுத்தப்படாத பாம்பின் இரத்தத்தைக் குடிக்கும்போது, அது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.
பாம்பு இரத்தம் கலந்த பானத்தை குடிப்பது ஆரோக்கியமானதா?
பாம்பு இரத்தம் ஒருவருக்குச் சிறப்பான ஆற்றலைத் தருகிறது அல்லது நோய்களைக் குணப்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாம்பின் இரத்தத்தை எடுக்கும்போதும், சேமித்து வைக்கும்போதும், அதைக் குடிக்கும்போதும் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பாம்பின் விஷம் கலந்த திரவத்தைக் குடிப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். குறிப்பாக உங்கள் வாயின் உட்பகுதியில் ஏதேனும் காயங்கள் இருந்தால், இந்த ஆபத்து இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications

