Latest Updates
-
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
கூரைக்கடை கார சட்னி - இட்லிக்கு இந்த சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
செப்டம்பர் 14, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க நிறைய சோதனைகளை சந்திக்கப் போறாங்களாம் -
கடக ராசியில் உருவாகும் குரு-மங்கள யோகத்தால் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் சுக்கா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும் -
விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பொருட்களை வைத்து பிள்ளையாரை வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்குமாம் -
சாக்லேட் கொழுக்கட்டை ரெசிபி - விநாயகர் சதுர்த்திக்கு இந்த கொழுக்கட்டையை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும்
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா?
இந்தியா தொழிலநுட்ப வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தாலும், இப்போதும் வெளியுலகத்துடன் சிறிதும் தொடர்பில்லாத அவர்களின் வேர்களுடன் நெருக்கமான தொடர்புடன் வாழும் சிலர் இந்தியாவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் ஒரு பகுதியினர் தொழில்நுட்பத்திலிருந்து விலகி இயற்கையோடு இணைந்து வாழவே விரும்புகின்றனர்.
இந்தியாவின் சில பழங்குடியினரிடையே இத்தகைய வாழ்க்கை முறை பரவலாகக் காணப்படுகிறது. இவர்களின் சில மரபுகளும் பழக்கவழக்கங்களும் அர்த்தமுள்ளவையாகத் தோன்றினாலும், அவர்களின் பல சடங்குகள் நமக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்துவதாகவே உள்ளது. இந்த பதிவில் இந்தியாவில் உள்ள சில பழங்குடியினரின் வினோத பழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஜராவா பழங்குடியினர்
இந்தியாவின் ஜராவா பழங்குடியினர் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாக விளங்குகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எஞ்சியிருக்கும் பழங்குடி இனங்களில் இவர்களும் ஒருவராவர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த இனம் மெல்ல மெல்ல அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்த பழங்குடியினர் தனிமையை விரும்பினாலும், நவீன நாகரிகத்தை வெறுப்பதில்லை. இவர்களின் மிகவும் விசித்திரமான குணம், இவர்களின் உணவுப் பழக்கம்தான். மானைத் தவிர மற்ற எந்த விலங்கையும் இவர்கள் உணவாக சாப்பிடுவார்கள். இதற்கான வினோத பழக்கத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்தத் தீவு முழுவதும் மான்கள் நிறைந்திருக்கும் நிலையில், இவர்களின் இந்தப் பழக்கம் மிகவும் வினோதமாக உள்ளது.
சென்டினல்ஸ் பழங்குடியினர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்
சென்டினல்ஸ் பழங்குடியினர் நவீன சமூகத்துடன் தொடர்புகொள்ள விரும்புவதில்லை. சொல்லப்போனால், வெளியுலகினருடன் அவர்கள் கடும் விரோதப்போக்கை கடைபிடிக்கின்றனர். அவர்களைப் பற்றி தெரிந்த ஒரே விஷயம் அவர்களுக்கு வாளி என்ற மிகவும் பிடிக்கும், இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், சிவப்பு நிற வாளிகள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சில தொல்லியல் ஆய்வாளர்களுக்கு, அவர்களைச் சந்திக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது; அப்போது அவர்களுக்குப் பரிசாகச் சிவப்பு மற்றும் பச்சை நிற வாளிகளும், பன்றிகளும் வழங்கப்பட்டன.
ராஜஸ்தானின் பில் பழங்குடியினர்
ராஜஸ்தான் மக்கள் தொகையில் சுமார் 39% பில் பழங்குடியினர் உள்ளனர். இந்தியாவின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் காணப்படும் இவர்கள், நாட்டின் மிகப்பெரிய பழங்குடியினக் குழுவாகத் திகழ்கின்றனர். இவர்களிடம் காணப்படும் ஒரு தனித்துவமான மற்றும் வழக்கத்திற்கு மாறான அம்சம் என்னவென்றால், பெரும்பாலான இந்தியத் திருமணங்களைப் போலன்றி, இங்கு மணமகன் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதற்காக வரதட்சணை செலுத்துகிறார். ராஜஸ்தானியப் பெண்கள் குறித்த பொதுவான பிம்பங்களுக்கு மாறாக, இங்கு பெண்கள் ஆண்களுடன் இணைந்து புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
மேகாலயாவின் காசி பழங்குடியினர்
காசி பழங்குடியினர் அவர்கள் பேசும் மொழியின் பெயராலேயே அழைக்கப்படுகிறார்கள். இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது என்னவென்றால், இவர்கள் தாய்வழிச் சமூக முறையைப் பின்பற்றுபவர்கள். அதாவது, இவர்கள் தங்கள் தாயின் பெயரையும் பாரம்பரியத்தையுமே தொடர்ந்து பின்பற்றுகிறார்கள். குடும்பத்தில் உள்ள ஆண்களுக்குப் பதிலாக, பெண்களே சொத்துரிமையைப் பெறுகிறார்கள்; குடும்பத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் பெண்களிடமே உள்ளது. இவர்களைப் போல மிகவும் நிதானமான மற்றும் கவலையற்ற மனப்பான்மை கொண்ட ஒரு பழங்குடி இனம் இந்தியாவில் இல்லையென்றே கூறலாம். காசி பழங்குடியினர் நிச்சயிக்கப்பட்ட திருமண முறையை நம்புவதில்லை. விவாகரத்து ஏற்பட்டால், அந்தப் பெண் மறுமணம் செய்துகொள்ள முழு சுதந்திரம் உண்டு. அத்துடன் சொத்து மற்றும் குழந்தைகளின் பொறுப்பும் அந்தப் பெண்ணிடமே இருக்கும். குடும்பத்தில் தாய் இறக்கும்போது, அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது இளைய மகளுக்கே சென்றடைகின்றன.
கிழக்கு இந்தியாவின் சந்தால் பழங்குடியினர்
சந்தால் பழங்குடியினர் கிழக்கு இந்தியாவின் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் தங்கள் சொந்தப் பழங்குடி மொழியான 'சந்தாலி'யுடன், பிற மொழிகளையும் பேசுகிறார்கள். இவர்கள் இனத்தைப் பற்றிய விசித்திரமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இறைவனை வழிபடுவதில்லை. மாறாக, அப்பகுதியிலுள்ள ஆவிகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவர்கள் முழுமையான நாத்திகர்கள் அல்ல என்றாலும், அந்த ஆவிகளைத் திருப்தியாக வைத்திருக்கவே முயல்கிறார்கள். இதற்காக அவர்கள் விலங்குகளைப் பலியிடுகிறார்கள். அதேசமயம் அவர்கள் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications

