Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க!

Ganesh Chaturthi 2026: முழுமுதற் கடவுளாக கருதப்படும் விநாயக பெருமானை ஒருவர் முறையாக வழிபட்டால், வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறைந்து, சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட விநாயகரை வழிபட மிகவும் உகந்த நாள் தான் விநாயகர் சதுர்த்தி. இந்த விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்று இந்தியாவில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Ganesh Chaturthi 2026 What To Offer To Lord Ganesha According To Your Zodiac Sign - Rasi-wise List

இந்த மங்களகரமான நாளில் விநாயகரை ஒருவர் தங்களின் ராசிக்கேற்ப பொருட்களை வாங்கி படைத்து வழிபாடு செய்து வந்தால், கிரகங்களின் மோசமான தாக்கங்கள் குறைந்து, வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களும் பிரச்சனைகளும் தீர்ந்து, வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது 12 ராசிக்காரர்களும் விநாயகருக்கு எதைப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் விநாயகருக்கு சிவப்பு நிற மலர்களையும், மோதகத்தையும் செய்து படைத்து வழிபாடு செய்தால், வேலையில் உள்ள தடைகள் நீங்கி, தொழிலில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் விநாயகருக்கு வெள்ளை நிற மலர்களை படைத்து, பால் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தால், வீட்டில் அமைதி நிலைக்கும் மற்றும் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் விநாயகருக்கு அருகம்புல் மற்றும் பச்சை நிற இனிப்புக்களை படைத்து வழிபாடு செய்தால், பண பிரச்சனைகள் நீங்கி, பண வரவு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயகருக்கு தேங்காய் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட இனிப்புகளை படைத்து வழிபடுவது நல்லது. இதனால் மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயக பெருமானுக்கு சிவப்பு சந்தனத்தையும், வெல்லத்தையும் படைத்து வழிபாடு செய்தால், பணியிடத்தில் வெற்றி கிடைக்கும் மற்றும் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்துடனும் மரியாதையும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் விநாயகருக்கு பச்சை பயறு மற்றும் அருகம்புல்லை படைத்து வழிபட வேண்டும். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.

துலாம்

துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் விநாயகருக்கு ரோஜாப்பூக்களையும், நறுமண பொருட்களையும் படைத்து வழிபாடு செய்தால், திருமண வாழ்வில் தம்பதிகளிடையே இருந்த பிச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் விநாயகருக்கு மாதுளை மற்றும் லட்டுக்களை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் பணப் பிரச்சனைகள் குறைந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் விநாயக பெருமானுக்கு மஞ்சள் நிற இனிப்புக்கள் மற்றும் மஞ்சளை படைத்து வழிபடுவதன் மூலம், கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் விநாயகருக்கு எள்ளு லட்டுக்களை படைத்து வழிபாடு செய்து வந்தால், சனி பகவானால் வாழ்வில் சந்திக்கும் கஷ்டங்கள், தடைகள் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் விநாய பெருமானுக்கு நீல நிற பூக்களையும், வெல்லத்தையும் படைத்து வழிபாடு செய்வது நல்லது. இதன் மூலம் நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைந்து, முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் விநாயகருக்கு வாழைப்பழங்களையும், மஞ்சள் நிற பூக்களையும் படைத்து வழிபடுவது நல்லது. இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, September 14, 2026, 13:24 [IST]
Desktop Bottom Promotion