விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்..

Posted By:

Ganesh Chaturthi Special Soft Poorna Kozhukattai Recipe In Tamil: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலே கொழுக்கட்டை தான். இந்த கொழுக்கட்டையில் பூர்ண கொழுக்கட்டை தான் இன்னும் விஷேசமானது. ஆனால் இந்த பூர்ண கொழுக்கட்டையை செய்வது தான் நிறைய பேருக்கு சவாலான ஒன்றாக இருக்கும்.

Ganesh Chaturthi Special Kozhukattai How To Make Soft Poorna Kozhukattai Recipe

உங்களுக்கும் பூர்ண கொழுக்கட்டை சரியாக செய்ய வராதா? எப்போது செய்தாலும் விரிசல் வந்து, பூர்ணம் வெளியே வந்து, இட்லி பாத்திரமே நாஸ்தியாகிவிடுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்திலும், அளவுகளுடனும் கொழுக்கட்டையை செய்யுங்கள். இதனால் கொழுக்கட்டையில் விரிசலும் வராது, கொழுக்கட்டையும் பஞ்சு போன்று சாப்ட்டாக இருக்கும்.

உங்களுக்கு விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூர்ண கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவு - 2 கப்
* சுடுநீர் - 3 கப்
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்

எள்ளு பூர்ணம் செய்வதற்கு...

* எள்ளு - 1/2 கப்
* கருப்பு எள்ளு - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* பொடித்த வெல்லம் - 3/4 கப்

தேங்காய் பூர்ணத்திற்கு...

* நாட்டு சர்க்கரை - 1 கப்
* தண்ணீர் - 1/3 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தேங்காய் - 1 பெரிய மூடி (துருவியது)
* ஏலக்காய் தூள் 1/4 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 கப் (பொடித்தது)

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவு அல்லது கொழுக்கட்டை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் நீரை நன்கு கொதிக்க வைத்து, அந்நீரில் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்க வேண்டும்.
* பின்பு அந்த நீரை சூடாக இருக்கும் போதே மாவில் ஊற்றி, கரண்டியால் நன்கு கிளறி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, மாவு ஓரளவு வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், கையில் நீரை தொட்டு மாவை நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, பூர்ணம் செய்யும் வரை மூடி வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது மாவு நன்கு வெந்து, கொழுக்கட்டை பஞ்சு போன்று விரிசல் இல்லாமல் வரும்.
* அதன் பின் எள்ளு பூர்ணம் செய்ய ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த எள்ளு விதைகளை சேர்த்து, அத்துடன் பொடித்த வெல்லம் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்து, கொரகொரவென்று பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து தேங்காய் பூர்ணம் செய்ய ஒரு பாத்திரத்தில் 1 கப் நாட்டுச் சர்க்கரை/பொடித்த வெல்லத்தை எடுத்து, அதில் 1/3 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும் அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்றி, அத்துடன் 1 சிட்டிகை உப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். நீர் முற்றிலும் வற்றும் முன் பொடித்த பொட்டுக்கடலை பொடியை சேர்த்து கிளறி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து விடவேண்டும். பின் கையில் எண்ணெய் தடவி சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை எண்ணெய் தடவிய ஒரு கவர் அல்லது வாழை இலையில் வைத்து, தட்டையாக தட்டி அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள எள்ளு பூர்ணம்/தேங்காய் பூர்ணத்தை வைத்து மடித்து, முனைகளை நன்கு அழுத்தி விட வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் செய்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை வைத்து, அதை இட்லி பாத்திரத்தினுள் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால், பஞ்சு போன்று மென்மையான பூர்ண கொழுக்கட்டை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, September 14, 2026, 16:22 [IST]
Desktop Bottom Promotion